தேவையான பொருள்கள்
கனவாய்-1/2கிலோ
மிளகாய் பொடி-1தேக்கரண்டி
மஞ்சள் பொடி-1/2தேக்கரண்டி
கரம் மசாலா-1ஸ்பூன்
சோள மாவு-1தேக்கரண்டி
அரிசி மாவு-1தேக்கரண்டி
எலும்பிச்ச பழம்-1/2
முட்டை-1
உப்பு-தேவையான அளவு
தேங்காய் எண்ணை-பொறிக்க தேவையான அளவு
செய்முறை
கனவாயைய் நறுக்கி கொள்ளவும் பின் மசாலா பொடிகள்,மாவுகள்,எலும்பிச்சை சாறு, உப்பு எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும் பின் அதில் முட்டை ஊற்றி நன்றாக கலக்கவும் அந்த கலவையில் கனவாய் போட்டு நன்கு கலக்கவும் அதை 30 நிமிடம் ஊற வைக்கவும் 30 நிமிடம் ஆனதும் சட்டியில் எண்ணை ஊற்றி சூடு வந்ததும் அந்த கனவாய் கலவையை போட்டு பொறித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.