
தேவையான பொருள்கள்
கீரை-2கப்
பன்னீர்-10துண்டுகள்
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சி,பூண்டு-1ஸ்பூன்
தனியா பொடி-1/2ஸ்பூன்
சிரகம் பொடி-1/2ஸ்பூன்
கரமாசாலா-1ஸ்பூன்
கடுகு,உளுந்து-1ஸ்பூன்
வற மிளகாய்-3
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் பன்னீரை பொறித்து எடுத்து கொள்ளவும் பொறிக்காமலும் போடலாம் பின் அந்த எண்ணையிலேயே கடுகு,உளுந்து,வறமிளகாய் போட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும் பச்சை வாசம் போனதும் தக்காளி,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் அதில் எல்லாப் பொடிகளையும் போட்டு வதக்கவும் பின் கீரையை போட்டு வதக்கவும் பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பன்னீர்,உப்பு போட்டு கொதிக்கவிடவும் கீரை வெந்ததும் நன்கு கிளறி தண்ணீர் எல்லாம் வத்தியதும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக