மருந்துகள் இல்லாமல் இதய நோய் தடுக்கும் மூன்று இயற்கை வழிகளை அறியலாம் இந்த கட்டுரையில்.
மூன்றில் ஒரு அமெரிக்கர் இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர் என ஆய்வுகள் தெறிவிக்கின்றன. இந்த நிலை நீடித்தால் இதய நோய் மருத்துவ பராமரிப்பு செலவு $ 273 பில்லியனிலிருந்து $ 818 பில்லியன் ஆக உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
நாம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், காரனரி இதய நோய், இதய செயலிழப்பு போன்றவைகளுக்கு என்ன பொதுவான காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.
அதிர்ஷ்டவசமாக நாம் அவற்றை இயற்கையாகவே எளிதாக சிகிச்சையின்றி தடுக்க முடியும்.
இதயத்ததை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஐந்து எளிய மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிகள்:
ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்
- பாலூட்டிகளின் இறைச்சி , sausages மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை விலக்குங்கள்
- விஞ்ஞானிகள் ஒரு நாளைக்கு நுகரப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒவ்வொரு 1.8 அவுன்ஸும் 42 சதவீதம் இதய நோய் ஆபத்துகளை உண்டாக்குகின்றன என கண்டறிந்து உள்ளனர்.
- Fresh காய்கறிகள் மற்றும் ஒமேகா 3 அடங்கிய anti-inflammatory foods உணவுகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.
தொடர்ந்து உடற்பயிற்சி
- தொடர்ச்சியான உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெறிவிக்கின்றன.
- உடற்பயிற்சி இதய இரத்த அழுத்ததை குறைக்கிறது மற்றும் நல்ல HDC கொழுப்பை அதிகரிக்கிறது.
- இன்னும் உடற்பயிற்சி இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது.
- ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் நடக்கும் உடற்பயிற்சியை நோக்கமாகக் கொள்ளுங்கள்.
- அல்லது வாரத்திற்கு மூன்று முறை ஒரு மணி நேரம். (aerobic activities are best)
மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்
- ஆங்கில மருத்துவர்கள் கூட இப்போது மன அழுத்தம் நாள்பட்ட இதய நோய் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
- நீங்கள் கடுமையான மன அழுத்தமும் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் உங்கள் வாழ்வில் சூழ்நிலைகளில் அடையாளம் காண வேண்டும்.
- இறை வழிபாடு, பிரார்தனை மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மிகவும் உதவக்கூடியது.
கேக் சமோசா போன்ற்வற்றை தவிருங்கள்
அதிகமான சோடியம் உட்கொள்ளல்-தவிருங்கள்:
சிப்ஸ், ஊறுகாய் மற்றும் அப்பளம் போன்றவை
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி வைத்திருங்கள்:
- சர்க்கரை நோயை அடயாளம் கண்டுகொண்டு க்ட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
- தொடர்ந்த செக்கப்களை தவிர்காதீர்.
இறைவன் அருளால் நலம் பெருவீர்.
1 கருத்து:
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...
கருத்துரையிடுக