Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 21, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்


சரித்திர காலத்துக்கும் இப்போதைய விஞ்ஞான யுகத்துக்கும் முடிச்சு போட்டுள்ள ஆக்ஷன் கதை...

சோழ பாண்டியர் போரில் பாண்டிய மக்கள் குல தெய்வமாக வழிபடும் சாமி சிலையை சோழ மன்னன் கவர்ந்து போகிறான். வியட்நாம் அருகில் உள்ள மிட்சு தீவில் சோழன் இறுதி காலத்தில் பதுங்கியதாக தகவல். எண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல்துறை பேராசிரியர் பிரதாப் போத்தன் சோழ நாகரீகம் பற்றி ஆய்வு செய்ய அத்தீவுக்கு போகிறார். அவர் திரும்பவில்லை. பிரதாப்பை கண்டுபிடிக்க தொல்லியல் துறை அதிகாரி ரீமாசென் தலைமையில் அரசு குழு அனுப்புகிறது. ராணுவ வீரர்கள், பிரதாப் போத்தன் மகள் ஆண்ட்ரியா ஆகியோரும் குழுவில் செல்கின்றனர். அவர்களுக்கு எடுபிடி வேலை செய்ய கார்த்தியும் அவர் நண்பர்களும் போகிறார்கள்.

இந்த சாகச பயணத்தில் சந்திக்கும் ஆபத்துகள் சீட் நுனிக்கு இழுக்கும் ஹாலிவுட் திகில்... நிறைய உயிர்ப்பலிக்கு பின் சிதைந்து கிடக்கும் சோழ நகரை அடைகின்றனர். அங்கு இன்னும் சாகாமல் வாழும் சோழ மன்னன் பார்த்திபனும் மக்களும் பஞ்சத்தில் சிக்கி சக ஆட்களையே கொடூரமாக கொல்பவர்களாக அறிமுகமாக அதிர்ச்சி. காட்டு மிரண்டித்தனமான அக்கூட்டத்தில் சிக்கி கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மூவரும் ஜீவமரண போராட்டம் நடத்துகின்றனர்.

சோழனை அழிக்க கூடுதல் ராணுவம் வருகிறது. அதன் பிறகு நடப்பவை எதிர்பாராத திருப்பங்கள். கதை களமும் காட்சி அமைப்புகளும் தமிழுக்கு புதுசு... கப்பலில் சோழர் தீவுக்கு புறப்படுவதும் அத்தீவில் பேய் இருக்கிறது. போனவர்கள் திரும்பவில்லை என்று “கெய்டு”கள் வர மறுப்பதும் பயங்கரத்தை பதிவு செய்கிறது. தீவுக்குள் ஆற்றை கடக்கும் போது வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு வகை உயிரினம் தண்ணீரில் மிதந்தும் பறந்தும் வந்து ரத்தம் உறிஞ்சி சாகடிப்பது உதறல். காட்டுவாசிகளுடன் நடக்கும் சண்டை... பாம்பு கூட்டத்தில் சிக்குவது... பாலைவனத்தில் புதை மணலை கடப்பது... மிரட்சியானவை.

பிற்பகுதி கதை சோழ மன்னன் குகைக்குள் முடங்குகிறது. தங்கள் மக்களையே கொன்று கூத்தாடும் காட்டு மிராண்டிதனமான சோழ நாகரீகம் அறியப்படாதது. அந்த கூட்டத்தில் தமிழில் புலமை காட்டும் சோழ மன்னன் முரண்படுகிறார். சோழ மக்களின் வறுமையும் மாமிச உணவுக்கு சண்டையிடுவதும் பரிதாபப்பட வைக்கின்றன.

கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகராக கலகலப்பாக வருகிறார். ரீமாசென், ஆண்ட்ரியாவை கலாய்க்கும் பஞ்ச் வசனங்கள் சிரிப்பலை. ஆண்ட்ரியா மேல் காதல் பார்வை வீசுவதும்... ரீமாசென் குறுக்கிடுவதும் ரகளை... பாம்பு கூட்டத்தில் இருந்து இருவரையும் தோளில் தூக்கி ஓடுவது வயிற்றை புண்ணாக்குகிறது. இரும்பு குண்டை வீசி ஆட்களை கொல்லும் தடியனை வீழ்த்துவது கைதட்டல்... ரீமாசென் சண்டையில் மிடுக்கு காட்டுகிறார். சோழ கோட்டைக்குள் புகுந்ததும் பாண்டியன் வாரிசு என்று தன்னை பிரகடனபடுத்துவதும் சோழ மன்னனை அழிக்க வகுக்கும் வியூகங்களும் எதிர்பாராதவை. சிறுநீர், அரை நிர்வாணம் வக்கிரமங்களை தவிர்த்து இருக்கலாம்.

சோழ மன்னனாக வரும் பார்த்திபன் வித்தியாச பரிணாமம் காட்டுகிறார். ஆண்ட்ரியா பளிச்சிடுகிறார். அழகம் பெருமாள் மிடுக்கான ராணுவ அதிகாரி. வித்தியாசமான கதை களத்தை எடுத்து காட்சிகளை புதுமைபடுத்தியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். ஜி.வி. பிரகாஷ் இசை மிரட்டல், ராம்ஜி ஒளிப்பதிவில் பிரமாண்டம். தனுஷ், ஐஸ்வர்யா பாடியுள்ள “உன் மேலே ஆசை தான்” பாடலும் அது படமாக்கப்பட்டிருப்பதும் அருமை.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்