Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.

ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.

அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.

விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.

எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.
மெயில் செய்தி

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கருவாயிலை சிக்கன் ஃப்ரை


தேவையான பொருள்கள்:
----------------------------------
சிக்கன் -கால் கிலோ(முள் இல்லாதது)
கருவாயிலை-நான்கு கொத்து
உப்பு-தேவையான அளவு
கரம் மசாலா-சிறிதளவு
மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
மிளகாய்
தூள் -கால் டீஸ்பூன்
தயிர்-அரை டீஸ்பூன்
எண்ணை-தேவையான அளவு

செய்முறை
:
----------------
கருவாயிலையை நன்கு இடித்து எடுத்துக் கொள்ளவும்
பின் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன்,உப்பு,தயிர்,
மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா,இடித்த கருவாயிலை
எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கி அரை மணி நேரம்
மூடி அப்படியே வைக்கவும்.

அரை
மணி நேரத்திற்க்கு பிறகு எடுத்து ஒரு கடாயில்
எண்ணை ஊற்றி அது நன்கு சூடு வந்ததும் சிக்கனை போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
சிக்கன் ஃப்ரை ரெடி சாப்பார் சாதம்,ரச சாதாம்
எல்லோத்துடனும் சைடிஷ்சாக சேர்த்து சாப்பிடலாம்.

கடல் பாசி (அகர் அகர்)

தேவையான பொருள்கள்:
-----------------------------------
கடல் பாசி-ஒரு கைபிடி
தேங்காய் பால்-அரை கப்
சீனி-கால் கப்
உப்பு-தேவையான அளவு
ரோஸ் கலர்-ஒரு சொட்டு
தண்ணீர்-கால் கப்
செய்முறை:
-----------------
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் கடல் பாசியை
போட்டு கொதிக்க விடவும் கொதி வந்ததும் சீனி,உப்பு
இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.

பத்து நிமிடம் கொதிக்க விட்டு பின் தேங்காய் பால் ஊற்றி
அடுப்பை லேசாக வைத்து காய்ச்சவும் 5நிமிடம் ஆனதும்
அடுப்பை அனைத்து விட்டு கலரை கலந்து ஒரு ப்ளேட்டில்
ஊற்றி அரை மணி நேரம் வைத்து பின் கட்டியானதும்
விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.

ப்ரிஜ்ஜில் வைத்து நோன்பு திறக்கும் நேரம் எடுத்து கட்
செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

புதன், ஆகஸ்ட் 25, 2010

கேரட் பராட்டா

தேவையான பொருள்கள்:
-----------------------------------

கோதுமை மாவு-ஒரு கப்
கேரட்
-1துருவியது
பட்டர்-2டீஸ்பூன்
உப்பு-தே.அளவு
நெய்-தேவைக்கு ஏற்ப
சீனி
-1டீஸ்பூன்
மில்க் பவுடர்-2டீஸ்பூன்
செய்முறை
:

---------------
ஒரு பாத்திரத்தில் மாவு,சீனி,பட்டர்,உப்பு,மில்க் பவுடர்,
துருவிய கேரட் எல்லாவற்றையும் போட்டு கைகளை
வைத்து கிளறி தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு
பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பிசைந்த
மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்
பிறகு சப்பாத்திக்கு உருண்டை பிடிப்பது போல்
பிடித்து சப்பாத்தி கட்டையால் தட்டி தவாவில்
போட்டு மேலே நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

சுவையான
குழந்தைங்களுக்கு பிடித்த பராட்டா ரெடி.
குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க என் பையனுக்கு
கேரட் பிடிக்காது இப்படி செய்து கொடுத்தால் விரும்பி
சாப்பிடுவான் அதான் குழந்தைங்களுக்கு பிடிக்கும்
என்று சொல்கிறேன்.

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

ஈசி ஓட்ஸ் நோன்பு கஞ்சி


தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)

பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு

புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை:
----------------

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு
எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு
வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி,
பச்சை
மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும்
புதினா,மல்லி தூவி இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.

வடை,பஜ்ஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

அவசரமாக நோன்பு கஞ்சி செய்ய வேண்டும் என்றால்
இப்படி ஓட்ஸ் வைத்து செய்யலாம் அரிசி வைத்து
செய்தால் சீக்கிரம் வேகாது ஓட்ஸ் சீக்கிரம் வெந்து
விடும் உடம்புக்கு நல்லதும் கூட ஓட்ஸ்.

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

பிஸ்கட் பைனாப்பிள் புட்டிங்


தேவையான பொருள்கள்:
---------------------------------

அன்னாசிப் பழம்-10துண்டுகள்
மேரி பிஸ்கட்-10
சீனி-கால் கப்
பால்-கால் கப்
பட்டர்-2டீஸ்பூன்
ஏலக்காய் தூள்-கால் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்-அரை டீஸ்பூன்

செய்முறை:
----------------

ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழம்,சீனி,பட்டர்
அனைத்தையும் போட்டு அடுப்பில் வைத்து சீனி
கரையும் வரை விடாமல் கலரவும் பின் அதனுடன்
காய்ச்சிய பாலை சேர்த்து கலக்கவும்.

பிஸ்கட்டை பொடித்து எடுத்து கொள்ளவும் பால் நன்கு
கொதித்ததும் பிஸ்கட்டை அதனுடன் சேர்த்து கிளரவும்
10நிமிடம் ஆனதும் பால் நன்கு வத்தியதும் ஏலக்காய் தூள்,
வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளரவும்.

பின் அடுப்பை அனைத்து விட்டு வேறு பாத்திரத்தில்
மாற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும் ஒரு மணி நேரம் ஆனதும்
எடுத்து பரிமாறவும்.

ஈசியான புட்டிங் ரெடி இதே செய்முறையில் ப்ரெட்
வைத்தும் செய்யலாம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

ரவை டோக்ளாதேவையான பொருள்கள்:
--------------------------------

ரவை-ஒரு கப்
தயிர்-ஒரு கப்
பச்சை மிளகாய்-இரண்டு
கொத்த மல்லி- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
பேக்கிங் சோடா-அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்-சிறிதளவு

தாளிக்க:
------------

எண்ணை-2டீஸ்பூன்
கடுகு-கால் டீஸ்பூன்
கருவா இலை-1கொத்து
வர மிளகாய்-3

செய்முறை:

---------------
ஒரு பாத்திரத்தில் ரவை,உப்பு,பேக்கிங் சோடா,
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி,பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய் மஞ்சள் தூள் அன்
போட்டு ஸ்பூன் வைத்து கலந்து விட்டு
பின்
தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் ஒரு பேக்கிங்
ட்ரேயில் எண்ணை தடவி அதில் மாவு கலவையை
ஊற்றி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஆவியில்
அவித்து எடுக்கவும்.

பிறகு
ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடாக்கி கடுகு,
வர மிளகாய்,கருவாயிலை என்று ஒன்றன் பின்
ஒன்றாக போட்டு தாளித்து அவித்தெடுத்த
டோக்ளா மீது கொட்டவும்.
ஈசியான சுவையான ரவை டோக்ளா ரெடி.

பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து விரும்பிய
சட்னியில் தொட்டு சாப்பிடவும்.

மைதா பன்


தேவையான பொருள்கள்:
---------------------------------

மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப்
சீனி-3டீஸ்பூன்
ஈஸ்ட்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர்
-1/4கப்(இளம் சூடான)

செய்முறை
:

----------------

முதலில் இளம் சூடான நீரில் ஈஸ்ட்,சீனி இரண்டை
போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும்.

பின் மாவில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
பதினைந்து நிமிடம் ஆனதும் ஈஸ்ட் சேர்த்த தண்ணீரில்
மாவை
கொட்டி பிசையவும் பிசைந்த மாவை 3மணி நேரம்
ஒரு துணியால் மூடி வைக்கவும்.

3மணி நேரத்திற்க்கு பிறகு பிசைந்து வைத்த மாவு நன்கு
பொங்கி இரண்டு மடங்காக ஆகி இருக்கும்.சிறிது மாவை கைகளில் தடவிக் கொண்டு இல்லை
என்றால் மாவு கைகளில் ஓட்டும் சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி அவன் ட்ரேயில் வைத்து
ஓன் அரை மணி நேரம் திரும்பவும் துணியால் மூடி
வைக்கவும் சிறு உருண்டைகள் நன்றாக உப்பி வந்து
இருக்கும் அதன் மேல் ப்ரெஸ்சினால் தண்ணீரை
தொட்டு தடவவும்.

அதை
அவனில் 15நிமிடம் வைத்து எடுத்தால் பன் ரெடி.
இதே போல் கோதுமை மாவு,ஆட்டா மாவு இதனை வைத்து
செய்யலாம்
நன்றாக இருக்கும்.


வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

சப்போட்டா மில்க் சேக்


தேவையான பொருள்கள்:
---------------------------------
சப்போட்டா பழம்-5
பால்-1கப்(காய்ச்சியது)
சீனி-3டீஸ்பூன்
ஜஸ்கிரீம்-2டீஸ்பூன்

செய்முறை:
---------------

சப்போட்டாவின் தோலை நிக்கி அதில் உள்ள விதையை
எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் சீனி,பால்
ஜஸ்கிரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மிக்ஸியில்
அடித்துக் கொள்ளவும்.

பின் கிளாசில் ஊற்றி பிரிஜ்ஜில் வைத்து குடிக்கவும்.
ஈசியான ஆரோக்யமான மில்க் சேக் தயார்.

வெஜ் சீஸ் சமோசா


தேவையான பொருள்கள்:
---------------------------------

மைதா மாவு-1&1/2கப்
பட்டர்-3டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
எண்ணை-பொறிக்க தேவையான அளவு

வெஜ் மிக்ஸ் தேவையான பொருள்:
---------------------------------------------

கேரட்-1
பின்ஸ்-7
உருளைக் கிழங்கு-1பெரியது
பட்டானி-1/4கப்
வெங்காயம்-1பெரியது
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய் தூள்-1/2டீஸ்பூன்
மிளகு தூள்-1டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு-1/2டீஸ்பூன்(விழுது)
உப்பு-சுவைக்கேற்ப
எண்ணை-3டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா-1/4டீஸ்பூன்
ஃபெடா சீஸ்-5டேபிள் ஸ்பூன் துருவியது

செய்முறை:
---------------
ஒரு பாத்திரத்தில் மாவு,உப்பு,பட்டர் எல்லாவற்றையும்
சேர்த்து பிசைந்து கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து
சப்பாத்தி மாவு பதத்திற்க்கு நன்றாக பிசைந்து ஒரு
துணியினால்
மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு
சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ளவும்
அவிந்ததும்
உருளைக் கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்

காய்களை பொடிதாக நறுக்கி கொள்ளவும் பின் கடாயில்
எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
லேசாக வதங்கியதும் இஞ்சி,பூண்டு,உப்பு சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும் பின் பொடிகள்
அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின் எல்லா
காய்களையும் சேர்த்து கிளறவும்.

காய்கள் வெந்து இறக்கப் போகும் முன் சீஸ் சேர்த்து
கிளறவும் எல்லாம் நன்கு கிளறி வெந்ததும் அடுப்பில்
இருந்து இறக்கி ஆரவிடவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு
தட்டுவது போல் தட்டி வெஜ் சீஸ் கலவையினை அதன்
நடுவில் வைத்து மூடி எண்ணையில் போட்டு பொறித்து
எடுத்தால் வெஜ் சீஸ் சமோசா.

தக்காளி சாஸ்வுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
ரெடி.

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

மதராசபட்டினம் பாடல் வரி


எவ்வளவு இனிமையான பாடல் பாடல் வரிகள்
அருமை எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

ஆண்:
-------
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்த தாரும் இல்லையே

பெண்:
--------
புழரும் காலை பொழுதை முழு
மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்:
--------
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதறுகே நேரம் போதவில்லையே

பெண்:
--------
எதுவும் பேசவில்லையே இன்று
ஏனோ எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோஓஓஓஓஓஓஓஓஓஓஒ

ஆண்:
-------
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
பூந்தளிரேஏஏஏஏஏஏஏஏஏஏ

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

ஆண்:
-------
வார்த்தை தேவையில்லை
வாழும் காளம் வரை பாவை
பார்வை மொழி பேசுமே

பெண்:
--------
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்:
-------
வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

பெண்:
-------
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவன் அம்பு
எனை வெல்லுதே

ஆண்:
-------
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் என்கு கொண்டு
நிருத்தும்

பெண்:
--------
இதை அறிய கிடைக்கும்
விளக்கம் அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்:
-------
பூந்தளிரேஏஏஏஏஏஏஏஏஏஏ

பெண்:
-------
OH WHERE WOULD I BE WITHOUT
THIS JOY INSIDE OF ME?
IT MAKES ME WANT TO COME ALIVE
IT MAKES ME WANT TO FLY INTO THE SKY!
OH WHERE WOULD I BE IF I DIDN'T
HAVE YOU NEXT TO ME?
OH WHERE WOULD I BE?
OH WHERE, OH WHERE?

ஆண்:
-------
எந்த மேகம் இது எந்தன்
வாசல் வந்து எங்கும்
ஈர மழை தூவுதே

பெண்:
--------
என்ன உறவு இது எதுவும்
புரியவில்லை என்ற போதும்
இது நீலுதே.......

ஆண்:
-------
யார் என்று அறியாமல் பேர்
கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உறுவானதேன்

பெண்:
-------
ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும்
நிற்க்காமல் இவன் போகும் வழி
எங்கும் மனம் போகுதே

ஆண்:
-------
பாதை முடிந்த பிறகும் இந்த
உலகில் பயணம் முடிவதில்லையே

பெண்:
--------
காற்றில் பறந்தே பறவை
மறைந்த பிறகும்

ஆண்:பெண்:
---------------
கிளை தொடங்கும் நடனம்
முடியவில்லையே இது
எதுவோஓஓஓஓஓஓஒ

குழு:
-------
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

பெண்:
--------
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்த தாரும் இல்லையே
புழரும் காலை பொழுதை முழு
மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்:
-------
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதறுகே நேரம் போதவில்லையே

பெண்:
-------
எதுவும் பேசவில்லையே இன்று
ஏனோ எதுவும் தோன்றவில்லையே

ஆண்:பெண்:
---------------
என்ன புதுமைஈஈஈஈஈஈஈஈஈஈஈ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே

ஆண்:
--------
இது எதுவோஓஓஓஓஓஓஓஓஓ

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன

ஆலூ பராட்டா
தேவையான பொருள்கள்:
------------------------------
மைதா மாவு-1கப்
உருளைக்
கிழங்கு-1பெரியது

மல்லி
-சிறிதளவு
மஞ்சள்
தூள்-1/4டீஸ்பூன்

உப்பு
-தேவையான அளவு

பட்டர்
-
2டீஸ்பூன்
மிளகாய் தூள்-1/2டீஸ்பூன்
எண்ணை
-தேவையான அளவு

செய்முறை:
---------------

உருளைக் கிழங்கை தண்ணீரில் போட்டு வேகவைத்து
கொள்ளவும்.

வெந்த
உருளைக் கிழங்கை தோலை நீக்கி நன்றாக நசுக்கி
கொள்ளவும் பின் ஒரு கடாயில் எண்ணை விட்டு உருளை
கிழங்கை போட்டு கிளறவும் பின் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

எல்லாம்
நன்கு சேர்த்து கிளறியவுடன் மல்லி தூவி
இறக்கவும்.

ஒரு
பாத்திரத்தில் மாவு ,உப்பு இரண்டையும் சேர்த்து
கலந்து அதில் பட்டர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு பதத்திற்க்கு பிசைந்து எடுக்கவும்.
பின் மாவை உருண்டை பிடித்து உருளை கிழங்கு
கலவையினையும் அதே அளவு உருண்டை பிடித்து
மாவை சப்பாத்திக்கு தட்டு வது போல் லேசாக தட்டி
நடுவில் உருளைக் கிழங்கு கலவையை வைத்துமாவினை மேலே மூடி நன்கு சப்பாத்தி கட்டையினால்
உருட்டி சூடுபடுத்திய தாவாவில் போட்டு சிறிதளவு
எண்ணை விட்டு சுட்டு எடுக்கவும்.
ஆலு பராட்டா ரெடி இதற்க்கு சைடிஷ் தேவையில்லை
அப்படியே சாப்பிடலாம் எண்ணைக்கு பதில் நெய் போட்டு
சுட்டெடுத்தால் சுவை இன்னும் அதிகமாக கிடைக்கும்.புதன், ஆகஸ்ட் 11, 2010

சாக்லட் கேரட் கேக்

தேவையான பொருள்கள்:
-------------------------------
மைதா மாவு- ஒன்றரை கப்
சீனி
-முக்கால் கப்(பவுடர் சீனி)

முட்டை
-இரண்டு(அறை வெப்ப நிலை)

உப்பு
-ஒரு டீஸ்பூன்
பட்டர்
-காள் கப் (அறை வெப்ப நிலை)
பேக்கிங்
பவுடர்-ஒன்றரை டீஸ்பூன்
பட்டை
தூள்( cinnamon பவுடர்)-காள் ஸ்பூன்
கேரட்
-இரண்டு

கோ கோ பவுடர்-2டீஸ்பூன்
வெனிலா
எசன்ஸ்-ஒரு டீஸ்பூன்

செய்முறை
:

---------------

முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

மாவு
,உப்பு,பேக்கிங் பவுடர்,பட்டை தூள்,கோகோ பவுடர்
இவை எல்லாவற்றையும் ஒரு பத்திரத்தில் போட்டு
கலந்து இரண்டு முறை சலித்து எடுத்துகொள்ளவும்.

பின்
ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சீனி
இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்இரண்டு
நன்கு
சேர்ந்ததும் அதில் வெனிலா
எசன்ஸ், முட்டை சேர்த்து கலக்கவும்.

பிறகு
அதில் மாவுக் கலவையை கொஞ்சம்
கொஞ்சமாக சேர்த்து கலக்கவும் மாவு அனைத்தையும்
கலந்த பின் அதனுடன் கேரட் சேர்த்து கலக்கவும்.

எல்லாம்
ஒன்று சேர கலந்ததும் கேக் ட்ரேயில் பட்டர்
தடவி கேக் கலவையினை அதில் ஊற்றவும்.

அவனை
250F ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 30 நிமிடம்
பேக் செய்து எடுக்கவும் வெந்து விட்டதா என்று தெரிந்து
கொள்ள டூத் பிக் வைத்து கேக்கை குத்தி பார்க்கவும் அதைகுத்தி எடுக்கும் போது அந்த டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல்
அப்படி வந்து விட்டால் கேக் வெந்து விட்டது அதை வேறு
ப்ளேட்டில் மாற்றி கட் செய்து டீயுடன் சாப்பிடலாம்.

சூப்பரான
கேரட் கேக் தயார் வாங்க ஆளுக்கு
ஒரு
பீஸ் எடுத்துக்கோங்க.

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்


***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

மெயிலிள் வந்த செய்தி...

புதன், ஆகஸ்ட் 04, 2010

சிங்கம் பாடல்வரி2ஆண்:

ஹேய்
காதல் வந்தாலே
காலு ரெண்டும் தண்ணாலே
காத்தா சுத்துதே
உந்தன் பின்னாலே

பெண்:
ஆசை வந்தாலே
ஐ லவ் யூ சொன்னாலே
கண்ணு ரெண்டும் சுத்துதே
உந்தன் முன்னாலே

ஆண்:
ஹேய்
திட்டம் போட்டுப் பார்த்து
திமிராப் பேசி
என்னை நீ வளைச்ச ஹோயே ஹோ

பெண்:
வெட்டறுவா மீச
முறுக்கி மொறைச்ச
என் நெஞ்சத் தொலைச்சே ஹோயே ஹோ

ஆண்:
ஏய் வாடி ஏய் வாடி
நீ வாடாமல்லிப் பூதாண்டி
இடுப்பு கொண்டை ஊசி சிரிப்பு
சிரிப்பு விட்டோ ஏசிதான்
ஹே முதுகு தேக்குமரம்
முழுசாப் பார்த்தா ஜுரம் தான்

பெண்:
நெத்தி நடுவே பொட்டு
வைக்கவே கஷ்டம் ஆச்சு
உன்னை நெனைச்சே
ஒரு ஓரம் வச்சுக்கிறேன்

ஆண்:

முன்னப்போல நான் இல்ல
மொத்தம்மா மாறியாச்சி
குற்றவாலியக் கூட கொஞ்சிக்கூப்பிடுறேன்

பெண்:
நெசமா ஒன்னப் பத்திப் பேச நேரன் பத்தலடா
மெதுவா முன்னப் போல பூமி சுத்தலடா

ஆண்:
சட்டினிய விட்டுப்புட்டு
இட்லியத் திண்ணுப்புட்டேன்
சட்டுன்னு அம்மாக்கிட்ட
ஏதோ ரீலு விட்டேன்

பெண்:

ஹே வீரா ஏய் சூறா
நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சிப்பூரா
பார்வைப் பட்டாக் கத்தி
பாயும் என்னைச் சுத்தி வா
ஹோ ஹோ ஹோ எனக்கு எப்போதுமே
நெனைப்பு ஒன்னைப் பத்தித்தான்

ஆண்:
மீசைத் திறுத்தச்
சின்ன கத்திரிகோல வச்சேன்
மொத்த நெனப்பில் நானும்
மூக்கை வெட்டிக்கிட்டேன்

பெண்:
பட்டுப் பொடவக்கட்டி
பட்டுன்னு காலில் விழ
பத்து தடவ தினம்
ஒத்திகைப் பார்த்துக்கிட்டேன்

ஆண்:
சத்துள்ள சாப்பாடில்ல
தின்னு நின்னு என் ஒடம்ப
சட்டுன்னு சோலத் தட்டைப் போலே மாத்துறியே

பெண்:
பட்டுன்னு வெட்டிப் பேசி
முட்டி நிற்கும் என் குணத்த
கட்டித்தான் போட்டு
ரொம்ப சாந்தமாக்கிரியே

ஆண்:
ஹேப் பாரு நீப்பாரு நீப்பார்த்தா
மனம் ஜோரு ஜோரு
உனக்கு முன்னால தான்
நெலாவே டல்லா இருக்கு
அட எனக்குக்கிட்ட
இதயமும் புல்ல இருக்கு

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்