Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center
சாதம் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதம் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 07, 2011

வெஜ் ஃப்ரைட் ரைஸ்





தேவையான பொருள்கள்:
---------------------------------
சாதம்-இரண்டு கப்
வெங்காயம்-ஒன்று (பெரியது)
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
கேரட்-ஒன்று(துருவியது)
பட்டாணி-கால் கப்
முட்டை கோஸ்-கால் கப்
முட்டை-மூன்று
பீன்ஸ்-ஐந்து
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
குடை மிளகாய்-அரை கப்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
மிளகு தூள்-கால் டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
அஜினமோட்டோ-சிறிதளவு(விரும்பினால்)
எண்ணை-முன்று டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு-கால் டீஸ்பூன்(விழுது)

செய்முறை:
----------------
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
பின் கடாயை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் எண்ணை
விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும்
தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியதும் குடை மிளகாய்,இஞ்சி,பூண்டு
போட்டு வதக்கவும் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
பின் அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்களையும்
சேர்த்து வதக்கவும் எல்லாம் நன்கு வதங்கியது முட்டையை
உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும் அதனுடன் மிளகு தூள்,
மிளகாய் தூள் போட்டு கிளறவும்.

பிறகு அதனுடன் அஜினமோட்டோ சேர்த்து கிளறவும் நன்கு
கிளறியவுடன் சாதம் சேர்த்து எல்லாம் ஒன்று சேர கிளறவும்
பின் மேலே புதினா,மல்லி தூவி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.

பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்
வெஜ் ஃப்ரைட் ரைஸ் ரெடி .

வியாழன், ஜூலை 22, 2010

வெஜ் பிரியாணி(குக்கர் செய்முறை)



எலக்ட்ரிக் குக்கர் செய்முறை

தேவையான பொருள்கள்:
-------------------------------
பாசுமதி அரிசி-11/2கப்
வெங்காயம்-2
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
தயிர்-4 டீஸ்பூன்
எண்ணை-3டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4
நறுக்கிய காரட்-1/2கப்
நறுக்கிய பீன்ஸ்-1/4
கப்
பட்டானி
-1/2கப்
நறிக்கிய காளிஃப்ளவர்-1/2கப்
உருளை
கிழங்கு-1
கோஸ்-1/4கப் நறுக்கியது
உப்பு-தேவையான அளவு
பிரியாணி மசாலா-1டீஸ்பூன்
பன்னீர்
-10துண்டுகள்
கறி மசாலா-1/4டீஸ்பூன்
கொத்த மல்லி-ஒரு கை பிடி
ஏலக்காய்
,பட்டை,கிராம்பு-சிறிதளவு
குடை
மிளகாய்-1சிறியது

இஞ்சி
,பூண்டு-1டீஸ்பூன்


செய்முறை
:
----------------
முதலில் எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
பன்னீரை
பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்
குக்கரை சூடு செய்து அதில் எண்ணை ஊற்றி சூடு
வந்ததும்
ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாவற்றையும்
எண்ணையில்
போட்டு பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம்
வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய்
போட்டு
வதக்கவும் எல்லாம் சேர்ந்து வதங்கியதும்
இஞ்சி
,பூண்டு
சேர்த்து வதக்கவும் இஞ்சி,பூண்டு நன்கு
வதங்கியதும்
.
மசாலா பொடிகள் அனைத்தையும்
அதனுடன்
சேர்த்து
கிளரவும் .

பின்
காய்கள் சேர்த்து கிளரவும் எல்லாவற்றையும்

நன்கு
சேர்த்து கிளறி தயிரை சேர்க்கவும் பிறகு
தண்ணீர்
சேர்த்து
அந்த கலவையை கொதிக்கவிடவும்.

அரிசியை
10நிமிடம் ஊறவைத்து நன்கு தண்ணீரில்

கழுவி
தண்ணீரை வடித்து அதனுடன் சேர்த்து போட்டு

கிளரவும்
மேலே பன்னீர்,மல்லி போட்டு மூடி விடவும்.


பின்
தண்ணீர் வற்றி பிரியாணி வெந்து நிற்க்கும் முன்

அலுமினியம்
பாயில் வைத்து குக்கரை கவர் செய்யவும்
கவர்
செய்து மூடியை வைத்து மேலே மூடி விடவும்.


பிரியாணி
வெந்து குக்கர் நின்ர உடனே ஆஃப் செய்து

அப்படியே
15நிமிடம் வைத்து விடவும் பிரியாணி ரெடி.


தயிர்
பச்சடி,வெஜ் சாலட் இவைகளுடன் சாப்பிட
அருமையாக
இருக்கும் நெய் சேர்க்கததால்
கலோரிகள்
அதிகம் கிடையாது
தயிரும்
கொஞ்சமாகதான்
சேர்த்து இருக்கு அதனால்
எல்லோரும்
சாப்பிடலாம்.

வியாழன், மார்ச் 25, 2010

குடை மிளகாய் சாதம்

தேவையான பொருள்கள்:
குடை மிளகாய்-2
சாதம்
-11/2கப்
எண்ணை
அல்லது பட்டர்-3டீஸ்பூன்

வறுத்து
பொடி செய்ய:
வற மிளகாய்-7
கடுகு
-1டீஸ்பூன்

சிரகம்
-2டீஸ்பூன்

துவரம்
பருப்பு-2டேபிள் ஸ்பூன்

உளுந்து
-3டேபிள் ஸ்பூன்

வேர்க்
கடலை-1/4கப்

கருவா
இலை-2கொத்து


செய்முறை:
முதலில் வறுக்க கொடுத்து இருக்கும் பொருள்கள்
அனைத்தையும்
கடாயை சூடு படுத்தி அதில்
போட்டு
வறுக்கவும்.


வறுத்ததை
மிக்ஸியில் போட்டு பொடி
செய்யவும்
.

குடை
மிளகாயை உங்கள் விருப்பம் போல்
நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி அது சூடு வந்ததும்
குடை
மிளகாயினை அதில் போட்டு வதக்கவும்.

பொடி செய்து வைத்து இருப்பதை அதில்
போட்டு வதக்கவும் எல்லாம் சேர்ந்து
வதக்கியதும்
சாதம்,
உப்பு சேர்த்து கிளறவும்
நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான குடை மிளகாய் சாதம் ரெடி.

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

பருப்பு சாதம்


தேவையான பொருள்கள்
அரிசி-1கப்
துவரம் பருப்பு-1/2கப்
தண்ணீர்-3கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பூண்டு-10பல்
மல்லி-2கொத்து
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
கடுகு,சிரகம்-1/2டிஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
முதலில் பருப்பிள் தண்ணீர் ஊற்றி 20நிமிடம் ஊற வைக்கவும் பின்
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கடுகு,சிரகம் போட்டு வெடித்ததும்
பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும் பின் அதில் தக்காளி,மஞ்சள் பொடி
போட்டு வதக்கவும் பின்பு அதில் பருப்பை கொட்டி கிளறி அதில் அரிசி போட்டு
உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும் வெந்த பிறகு மல்லி தூவி இறக்கவும். இது குழந்தைங்களுக்கும்,பெரியோர்காளுக்கும் ஒரு நல்ல
ஆரோக்கியமான உணவு.

செவ்வாய், ஜனவரி 19, 2010

பட்டாணி புலாவ்



தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் -1
தக்காளி-1
கருவாயிலை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

எண்ணெய் - 2ஸ்பூன்
பட்டை - 1 சிறு துண்டு
லவங்கம் - 4

பிரியாணி இலை - 1

கொத்தமல்லி,புதினா
தயிர் - 1/2 கப்

தண்ணீர் - 1 கப்


செய்முறை
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊர வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்ததும் தக்காளி போட்டு வதக்கவும் பின் பட்டாணி போட்டு சேர்த்து கிளறவும். இப்போது ஊர வைத்த அரிசி, உப்பு,தயிர், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிறுந்தீயில் மூடி போட்டு சாதம் வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.பட்டாணி புலாவ் ரெடி.


குறிப்பு: கலராக வேண்டும் என்றால் சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சட்டியில் எண்ணைய் ஊற்றி ஒரு முட்டை ஊற்றி கிளறி சாதம் மேல் தூவி கொடுக்கலாம் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்