Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, பிப்ரவரி 07, 2015

சர்தார்ஜி ஜோக்ஸ்!

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்.. கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..! சர்தார்ஜி ஜோக்ஸ்!.. ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..! ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம். அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு.. சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..! சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு.. அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு.. திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!! ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி…! புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், “அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்” என்று கூறினார். சர்தார்ஜியோ, “முடியாது” என்று சொல்லிவிட்டார். அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார். விமானி சொன்னது இதுதான்: நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன. சர்தார்ஜியின் ஷாக்ஸ்…! சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது. பிஸா கடையில் சர்தார்ஜி…! சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா? சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது. சர்தார்ஜி தீவிரவாத குழுவில்…! சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள். முதல் பணி ஒரு கார்ல குண்டு வைக்கறது. சர்தார் 1 :டேய் மச்சி…நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார். சர்தார் 2 கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன் சர்தார்ஜி சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார். மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார், “சே இன்னைக்கும் விழணுமா?

செவ்வாய், ஜனவரி 21, 2014

FW: JOBS

From: Mohamed Ziauddin [mailto:ziariss@gmail.com]
Sent: Tuesday, January 21, 2014 11:32 AM
Subject: JOBS

 

 

 

Kind regards,

Mohamed Ziauddin

 
Disclaimer:

The information in this email and in any files transmitted with it is intended only for the addressee and may contain confidential and/or privileged material. Access to this email by anyone else is unauthorized. If you receive this in error, please contact the sender immediately and delete the material from any computer. If you are not the intended recipient, any disclosure, copying, distribution or any action taken or omitted to be taken in reliance on it, is strictly prohibited. Statement and opinions expressed in this e-mail are those of the sender, and do not necessarily reflect those of DEWA. DEWA accepts no liability for any damage caused by any virus/worms transmitted by this email.

Dubai Electricity and Water Authority, Dubai, UAE, http://www.dewa.gov.ae

Our Vision: A sustainable world-class utility.
Our Mission: Meeting customer satisfaction and promoting Dubai's vision through delivery of electricity and water services at a world-class level of reliability, efficiency, safety and environment by a competent workforce and effective partnerships; supporting resources sustainability.

சனி, ஆகஸ்ட் 11, 2012

உங்கள் இதயம் காக்க


ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கானோர் இதய நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இந்த அழிவுகரமான நிலைமைக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பராமரிப்பு செலவு வரும் 2030-ல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என அறியப்படுகிறது. 
மருந்துகள் இல்லாமல் இதய நோய் தடுக்கும் மூன்று இயற்கை வழிகளை அறியலாம் இந்த கட்டுரையில்.

மூன்றில் ஒரு அமெரிக்கர் இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர் என ஆய்வுகள் தெறிவிக்கின்றன. இந்த நிலை நீடித்தால் இதய நோய் மருத்துவ பராமரிப்பு செலவு $ 273 பில்லியனிலிருந்து $ 818 பில்லியன் ஆக உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது. 

நாம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், காரனரி இதய நோய், இதய செயலிழப்பு போன்றவைகளுக்கு என்ன பொதுவான காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.
அதிர்ஷ்டவசமாக நாம் அவற்றை இயற்கையாகவே எளிதாக சிகிச்சையின்றி தடுக்க முடியும். 
இதயத்ததை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஐந்து எளிய மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிகள்:

ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்
 1. பாலூட்டிகளின் இறைச்சி , sausages மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை விலக்குங்கள்
 2. விஞ்ஞானிகள் ஒரு நாளைக்கு நுகரப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒவ்வொரு 1.8 அவுன்ஸும் 42 சதவீதம் இதய நோய் ஆபத்துகளை உண்டாக்குகின்றன என கண்டறிந்து உள்ளனர்.
 3. Fresh காய்கறிகள் மற்றும் ஒமேகா 3 அடங்கிய  anti-inflammatory foods உணவுகள் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.
 

தொடர்ந்து உடற்பயிற்சி

 1. தொடர்ச்சியான உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெறிவிக்கின்றன.
 2. உடற்பயிற்சி இதய இரத்த அழுத்ததை குறைக்கிறது மற்றும் நல்ல HDC கொழுப்பை அதிகரிக்கிறது.
 3. இன்னும் உடற்பயிற்சி இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது.  
 4. ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் நடக்கும் உடற்பயிற்சியை நோக்கமாகக் கொள்ளுங்கள்.  
 5. அல்லது வாரத்திற்கு மூன்று முறை ஒரு மணி நேரம். (aerobic activities are best)


மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்
 1. ஆங்கில மருத்துவர்கள் கூட இப்போது மன அழுத்தம் நாள்பட்ட இதய நோய் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். 
 2. நீங்கள் கடுமையான மன அழுத்தமும் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் உங்கள் வாழ்வில் சூழ்நிலைகளில் அடையாளம் காண வேண்டும்.
 3. இறை வழிபாடு, பிரார்தனை மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மிகவும் உதவக்கூடியது.
 TRANSFATஐ தவிருங்கள்:


கேக் சமோசா போன்ற்வற்றை தவிருங்கள்


 அதிகமான சோடியம் உட்கொள்ளல்-தவிருங்கள்:


சிப்ஸ், ஊறுகாய் மற்றும் அப்பளம் போன்றவை


 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி வைத்திருங்கள்:
 1. சர்க்கரை நோயை அடயாளம் கண்டுகொண்டு க்ட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
 2. தொடர்ந்த செக்கப்களை தவிர்காதீர்.

இறைவன் அருளால் நலம் பெருவீர்.


புதன், நவம்பர் 30, 2011

ஒவ்வொரு தமிழனும் பார்த்து கேட்டு ரசிக்க வேண்டிய ஒரு பாடல்
எல்லா தமிழனையும் ஊக்கப்படுத்தும் பாடல் வரிகள்
 


படம்: 7 ஆம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலசிரியர்: பா.விஜய்

---------------------------------------------------------------
இன்னும் என்ன தோழா… எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளா செய்வோமே


யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே


வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் , எழுவோம்
 
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக எழுக


இன்னும் என்ன தோழா… எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளா செய்வோமே
------------------------------------------------------- 
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்


விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?


ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம் அகம் புறம் நம் தேகத்தில்
 ---------------------------------------------------------------------
 கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்


பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?


இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு

---------------------------------------------------------------------------
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே

என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே


வந்தால் அலையாய் வருவோம் 
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் , எழுவோம் 

இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக 
இளமை படையே வருக எழுக

சனி, நவம்பர் 19, 2011

மைதா எச்சரிக்கை! புரோட்டாவின் கதை!!

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா?


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை?! ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு!!?
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே!!! .

 
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாய்ல் பெராக்சைட்  (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் ஆகும்.
இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவு (diabetes) க்கு மிக முக்கியக் காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு (diabetes) நோய் வர வழைக்க பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணைபுரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியைக் குறைத்து விடும் .

இதில் குறிப்பிடும் படியான ஆரோக்கியத்துக்கு உகந்த சத்துகள் எதுவும் இல்லை! குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதை தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கல் ,இருதய கோளாறு , நீரிழிவு (diabetes) போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர் .
மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு கொள்ளசெய்யுங்கள் .

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்