Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், மார்ச் 25, 2010

குடை மிளகாய் சாதம்

தேவையான பொருள்கள்:
குடை மிளகாய்-2
சாதம்
-11/2கப்
எண்ணை
அல்லது பட்டர்-3டீஸ்பூன்

வறுத்து
பொடி செய்ய:
வற மிளகாய்-7
கடுகு
-1டீஸ்பூன்

சிரகம்
-2டீஸ்பூன்

துவரம்
பருப்பு-2டேபிள் ஸ்பூன்

உளுந்து
-3டேபிள் ஸ்பூன்

வேர்க்
கடலை-1/4கப்

கருவா
இலை-2கொத்து


செய்முறை:
முதலில் வறுக்க கொடுத்து இருக்கும் பொருள்கள்
அனைத்தையும்
கடாயை சூடு படுத்தி அதில்
போட்டு
வறுக்கவும்.


வறுத்ததை
மிக்ஸியில் போட்டு பொடி
செய்யவும்
.

குடை
மிளகாயை உங்கள் விருப்பம் போல்
நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி அது சூடு வந்ததும்
குடை
மிளகாயினை அதில் போட்டு வதக்கவும்.

பொடி செய்து வைத்து இருப்பதை அதில்
போட்டு வதக்கவும் எல்லாம் சேர்ந்து
வதக்கியதும்
சாதம்,
உப்பு சேர்த்து கிளறவும்
நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான குடை மிளகாய் சாதம் ரெடி.

திங்கள், மார்ச் 15, 2010

ஓட்ஸ் கிச்சடி


தேவையான பொருள்கள்:
ஓட்ஸ்-1கப்
கேரட்-1சிறியது

பீன்ஸ்-7

பச்சை பட்டாணி-1/4கப்

வெங்காயம்-1

தக்காளி-1

தண்ணீர்-1/2கப்

பச்சை மிளகாய்-2

மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்

மிளகாய் பொடி-1/4டீஸ்பூன்
தனியா பொடி-1/4டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

பூண்டு-2பல்

எண்ணை-2டீஸ்பூன்

கடுகு-1/4டீஸ்பூன்



செய்முறை:

முதலில் நறுக்க வேண்டிய அனைத்தையும்
நறுக்கி
வைத்துக் கொள்ளவும்.
பூண்டை தட்டி எடுத்துக்
கொள்ளவும்.

காடாயை சூடு படுத்தி அதில் ஓட்ஸ்சை போட்டு
வறுக்கவும்
நன்கு வாசனை வந்ததும் கருக
விடாமல் சிவக்க விடாமல்
அடுப்பை சிறிதாக
வைத்தே வறுக்கவும் வறுத்ததை தனியாக

எடுத்து வைக்கவும்.


அதே காடாயில் எண்ணை விட்டு கடுகு
போட்டு வெடித்ததும்
வெங்காயம்,பூண்டு
போட்டு வதக்கவும் வதங்கியதும் தக்காளி,
ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து வதங்கியதும் காய்கள்
எல்லாவற்றையும் அதில்
போட்டு வதக்கவும்.

பின் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து
உப்பு போட்டு
காய்களை வேக விடவும்.

எல்லாம் நன்கு வெந்த உடன் ஓட்ஸை அதில்
சேர்த்து கிளறவும்.

நன்கு கிளறி இறக்கவும்.


இந்த கிச்சடி நன்றாக இருக்கும் ஆரோக்கியமான
கிச்சடியும்
கூட சுவையான ஓட்ஸ் கிச்சடி ரெடி.

வியாழன், மார்ச் 11, 2010

கடாய் பன்னீர்


தேவையான பொருள்கள்:
பன்னீர்--200கிராம்

தக்காளி--1பெரியது

வெங்காயம்--1
இஞ்சி,பூண்டு விழுது--1டீஸ்பூன்

குடை மிளகாய்--1பெரியது

மிளகாய் பொடி--1டீஸ்பூன்
கரம் மசாலா--1/4டீஸ்பூன்
மஞ்சள் பொடி--1/4டீஸ்பூன்

தனியா பொடி--1/2டீஸ்பூன்
உப்பு--தேவையான அளவு

எண்ணை-3டீஸ்பூன்


செய்முறை:

முதலில் நறுக்க வேண்டியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கினால் போதும் பின் அதில்
குடை மிளகாய்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் அரைத்து வைத்து இருக்கும்
தக்காளியை அதில் ஊற்றவும்.


எல்லாம் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும் பின்பு

பொடிகள் அனைத்தையும் அதில் சேர்க்கவும்.


சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 10நிமிடம்
கொதிக்கவிடவும்.

கொதித்ததும் பன்னீர் போட்டு கிளறவும் கிளறி
5நிமிடம் மூடி வைத்து எல்லாம் சேர்ந்து வெந்ததும்

இறக்கவும்.

இதை சப்பாத்தியுடன் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்
சமைக்கும் நேரமும் கம்மிதான்.

புதன், மார்ச் 10, 2010

இட்லி சாப்பிடுங்கள்!

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான்
அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?

என்று நம்மில் சில பேருக்குதெரியாது
இதோ தெரிந்து கொள்ளுங்கள்
.


அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற
வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில்
இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற

அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்

செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற

அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.


இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில்
ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில்
கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது
இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால்
பசியும்
உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும்
ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின்
அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது
வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை
விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

திங்கள், மார்ச் 08, 2010

காலை உணவை மறவாதீர்கள்!

காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும்
முக்கியம் அளவோடு சாப்பிடுவதின் மூலம்

நம் உடல் நலத்திற்க்கு மிகவும் நல்லது.

ஆறிலிருந்து எந்த வயதுக்காரரும் காலை
உணவை தவி
ர்க்கக் கூடாது.

முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டால்

அந்த இடைப்பட்ட
15.16மணி நேரத்தில் மூளையில்
குளுகோஸ் தீர்ந்து போயிருக்கும்.


இதுதான் நமக்கு சக்தி தருகிறது மூளை,பசியால்

துடிப்பதால் நமது உடல் கூடுதலாக வேலை செய்து

மாவுச் சத்து ,புரதம், கொழுப்பு போன்றவை உடலில்

எங்கேயாவது சேமிப்பகா இருந்தால் அதை உடனடியாக

உடைத்து எடுத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.


காலையில் தெளிவாக ஒருமுகச் சிந்தனையுடன்

சிந்தித்து நம் கடமையைச் செய்ய வேண்டும்.

அதற்க்கு மூளையில் குளுகோஸ் தேவை

அங்கே சேமிப்பாக குளுகோஸ் இல்லை.


உடல் எடை கூடும் என்பதால் பலர் காலை

உணவை தவிர்க்கிறார்கள் ஆனால் மதியம்

கூடுதலாகச் சாப்பிட்டு விடுகிறார்கள் இதற்குப்

பதிலாக காலையில் சப்பாத்தி,பால் அல்லது

இட்லி, சாம்பார் ஒரு கப் பழச் சாறு இந்த
இரண்டும்
இப்படி சாப்பிட வேண்டும்.

எதுவாக
இருந்தாலும் அந்த உணவு
எண்ணையில்
பொறித்த உணவாக
இருக்கக்
கூடாது இட்லி போல் ஆவியில்
வெந்த
உணவாக இருக்க வேண்டும். அப்படி
உள்ள உணவே
சிறந்தது.

ஆகையால் காலை உணவை மறவாதீர்கள்

அளவோடு சாப்பிடவும் மறவாதீர்கள்.

பழங்கள் சாப்பிடவும் மறவாதீர்கள்.

ஞாயிறு, மார்ச் 07, 2010

டொஃபு பராட்டா


தேவையான பொருள்கள்:

டொஃபு (
TOFU)-200கிராம்
மைதா மாவு-1 1/2 கப்

மிளகாய்
பொடி-1/2டீஸ்பூன்
சிரகப்
பொடி-1/4டீஸ்பூன்
கறி மசாலா-1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய்-3

மல்லி இலை-3டேபிள் ஸ்பூன்

எண்ணை
-2டீஸ்பூன்

டோமெட்டோ சாஸ்-2டீஸ்பூன்

எண்ணை -பராட்டா சுட தேவையான அளவு

உப்பு
-தேவையான அளவு
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தொஃப் போட்டு நன்கு பிசையவும்

உதிரியாகும்
வரை பிசையவும்.

பின் அதில் உப்பு,மிளகாய் பொடி,சாஸ்,எண்ணை,மல்லி,

சிரகப் பொடி,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கறி

மசாலா எல்லாவற்றையும் போட்டு சேர்த்து பிசையவும்.


அந்த கலவை நன்கு சேர்ந்ததும் அதில் மாவையும்
சேர்த்து
பிசையவும் தண்ணீர் தேவையில்லை
தொஃப்பில் உள்ள
ஈரத்தன்மையே போதும் தேவை
என்றால் சிறிதளவு
சேர்க்கவும்.

அதை நன்கு பிசைந்து 20நிமிடம் அப்படியே
காற்று படாத
அளவுக்கு மூடி வைக்கவும்.

பின்பு அதை பராட்டாவாக தட்டி தாவாவில்
எண்ணை ஊற்றி
அதில் அந்த பராட்டாவை
போட்டு பராட்டா சுடுவது போல்
சுட்டு எடுக்கவும்.

இந்த பராட்டா
மிகவும் மெதுவாக இருக்கும்
சுவையாகவும் இருக்கும்.

வியாழன், மார்ச் 04, 2010

பார்லி தண்ணீர் குடியுங்கள்!


கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே
பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே
குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான
வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
முறையாவது அருந்த வேண்டும்.

இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ்
உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை
நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது.
மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும்
பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது
மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள்.
தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை
ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி
கிடைக்கும்.

இதற்க்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

கர்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில்
கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி
தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
ஒரு கப் குடிக்க வேண்டும்.

செவ்வாய், மார்ச் 02, 2010

DRY கோபி மஞ்சூரியன்


பொறிக்க தேவையானவை:
காளிஃப்ளவர்- 1/2
மைதா
- 4டேபிள் ஸ்பூன்
சோளமாவு
- 3டேபிள் ஸ்பூன்
உப்பு
-தேவையான அளவு
மிளகு
தூள்- 1/4டீஸ்பூன்
எண்ணை
-பொறிக்க தேவையான அளவு

சாஸ் செய்ய தேவையானவை:
எண்ணை-1டேபிள் ஸ்பூன்
பூண்டு-5பல்

வெங்காயம்-1பெரியது

பச்சை மிளகாய்-2

தக்காளி சாஸ்-2டேபிள் ஸ்பூன்

ரெட் சில்லி சாஸ்-2டேபிள் ஸ்பூன்

குடைமிளகாய்-1

வெள்ளை வினிகர்-2டீஸ்பூன்

சோயா சாஸ்-1டீஸ்பூன்


செய்முறை:
முதலில் காளிஃப்ளவரை பெரிய துண்டுகளாக
எடுத்துக் கொள்ளவும்.


பின் மைதா மாவு, சோள மாவு, மிளகு பொடி,
உப்பு
எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர்
ஊற்றி
பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து
கொள்ளவும்.


கரைத்ததில் காளிஃபளவரை பஜ்ஜி போடுவது
போல்
நனைத்து எண்ணையில் போட்டு பொன்
நிறமாக
பொறித்து எடுக்கவும்.

சாஸ் செய்முறை:
கடாயில் எண்ணை ஊற்றி அது சூடு வந்தது
பொடியாக
நறுக்கிய பூண்டை போட்டு அது
வதங்கியதும் வெங்காயம்
போட்டு வதக்கவும்.

பின்
குடை மிளகாய் போடவும் எல்லாம் நன்கு
வதங்கியதும்
தக்காளி சாஸ்,சோயா சாஸ் ,
வினிகர்,
சில்லி சாஸ்,பச்சை மிளகாய்
எல்லாவற்றையும் போட்டு
திக்காக வந்ததும்.

ஏற்கனவே
பொறித்து வைத்து இருக்கும்
காளிஃப்ளவரை
அதில் போட்டு நன்கு கிளறவும்
சாஸ்
காளிஃப்ளவரில் நன்கு இறங்கும் வரைக்கும்
2நிமிடம்
மூடி வைக்கவும் பின்பு மூடியை திறந்து
கிளறி
இறக்கவும்.

சுவையான சைனிஸ் DRY கோபி மஞ்சூரியன் ரெடி.

திங்கள், மார்ச் 01, 2010

முக சுருக்க ஃபேசியல்

30வயது ஆனது முகத்தில் சுருக்கம் வந்து விடும்.
அப்படி வராமல் தடுக்க இந்த ஃபேசியல் செய்யலாம்.

இந்த ஃபேசியள் செய்வதால் முகச் சுருக்கம்
வாராது
ஆனால்
தினமும் செய்யக் கூடாது பத்து நாள்க்கு ஒரு
முறை செய்யலாம் முகத்தில் பூசியதும் பத்து நிமிடத்தில்
துடைத்து
எடுத்து விட வேண்டும் ரொம்ப நேரம் வைத்து
இருக்கக் கூடாது.


தேவையான பொருள்கள்:
முட்டை-1 வெள்ளை கரு

கடலை
மாவு-2டீஸ்பூன்

செய்முறை:
கடலை மாவு,முட்டையின் வெள்ளை கரு
இரண்டையும்
கலந்து அந்த கலவையினை
முகத்தில் அப்ளே செய்யவும்.


அது
காய்ந்ததும் திரும்பவும் அப்ளே செய்யவும்.
அது காய்ந்ததும்
மறுபடியும் அப்ளே செய்து பத்து
நிமிடம் அப்படி காய விடவும்.

பின் ஒரு துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை
துடைத்து
எடுக்கவும் துடைத்த பின் உங்கள் முகத்தில்
உங்களுக்கே
மாற்றம் தெரியும்.

குந்தன் கற்கள் பூ


குந்தன் கற்களால் நான் பண்ணிய பூ .

வழங்கியவர்: பாயிஷாஅஹமது

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்