
தேவையான பொருள்கள்:
--------------------------------
ரவை-ஒரு கப்
தயிர்-ஒரு கப்
பச்சை மிளகாய்-இரண்டு
கொத்த மல்லி- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
பேக்கிங் சோடா-அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்-சிறிதளவு
தாளிக்க:
------------
எண்ணை-2டீஸ்பூன்
கடுகு-கால் டீஸ்பூன்
கருவா இலை-1கொத்து
வர மிளகாய்-3
செய்முறை:
---------------
ஒரு பாத்திரத்தில் ரவை,உப்பு,பேக்கிங் சோடா,
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி,பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய் மஞ்சள் தூள் அன்
போட்டு ஸ்பூன் வைத்து கலந்து விட்டு
பின் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் ஒரு பேக்கிங்
ட்ரேயில் எண்ணை தடவி அதில் மாவு கலவையை
ஊற்றி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஆவியில்
அவித்து எடுக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடாக்கி கடுகு,
வர மிளகாய்,கருவாயிலை என்று ஒன்றன் பின்
ஒன்றாக போட்டு தாளித்து அவித்தெடுத்த
டோக்ளா மீது கொட்டவும்.

ஈசியான சுவையான ரவை டோக்ளா ரெடி.
பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து விரும்பிய
சட்னியில் தொட்டு சாப்பிடவும்.
5 கருத்துகள்:
பேர் வாயில நுழையாட்டி என்ன ஐட்டம் சூப்பரா இருக்கு .. அதுப் போதும் .ஹா..ஹா..
பேர் வாயில நுழையாட்டி என்ன ஐட்டம் சூப்பரா இருக்கு .. அதுப் போதும் .ஹா..ஹா..
பேர் வாயில் நுழையாட்டால் என்ன ஐட்டம் வாயில் நுழைந்தால் போதும்:-)
உங்கள் கருத்துக்கு நன்றி...
nallayirukku nisha. nalikku pani pathuttu solluren. thanx to sharing pa
வாங்க மதி கண்டிப்பா செய்து பாருங்க சாப்பிட நல்லாயிருக்கும் செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......:-))
கருத்துரையிடுக