Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், ஆகஸ்ட் 11, 2010

சாக்லட் கேரட் கேக்

தேவையான பொருள்கள்:
-------------------------------
மைதா மாவு- ஒன்றரை கப்
சீனி
-முக்கால் கப்(பவுடர் சீனி)

முட்டை
-இரண்டு(அறை வெப்ப நிலை)

உப்பு
-ஒரு டீஸ்பூன்
பட்டர்
-காள் கப் (அறை வெப்ப நிலை)
பேக்கிங்
பவுடர்-ஒன்றரை டீஸ்பூன்
பட்டை
தூள்( cinnamon பவுடர்)-காள் ஸ்பூன்
கேரட்
-இரண்டு

கோ கோ பவுடர்-2டீஸ்பூன்
வெனிலா
எசன்ஸ்-ஒரு டீஸ்பூன்

செய்முறை
:

---------------

முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

மாவு
,உப்பு,பேக்கிங் பவுடர்,பட்டை தூள்,கோகோ பவுடர்
இவை எல்லாவற்றையும் ஒரு பத்திரத்தில் போட்டு
கலந்து இரண்டு முறை சலித்து எடுத்துகொள்ளவும்.

பின்
ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சீனி
இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்இரண்டு
நன்கு
சேர்ந்ததும் அதில் வெனிலா
எசன்ஸ், முட்டை சேர்த்து கலக்கவும்.

பிறகு
அதில் மாவுக் கலவையை கொஞ்சம்
கொஞ்சமாக சேர்த்து கலக்கவும் மாவு அனைத்தையும்
கலந்த பின் அதனுடன் கேரட் சேர்த்து கலக்கவும்.

எல்லாம்
ஒன்று சேர கலந்ததும் கேக் ட்ரேயில் பட்டர்
தடவி கேக் கலவையினை அதில் ஊற்றவும்.

அவனை
250F ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 30 நிமிடம்
பேக் செய்து எடுக்கவும் வெந்து விட்டதா என்று தெரிந்து
கொள்ள டூத் பிக் வைத்து கேக்கை குத்தி பார்க்கவும் அதைகுத்தி எடுக்கும் போது அந்த டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல்
அப்படி வந்து விட்டால் கேக் வெந்து விட்டது அதை வேறு
ப்ளேட்டில் மாற்றி கட் செய்து டீயுடன் சாப்பிடலாம்.

சூப்பரான
கேரட் கேக் தயார் வாங்க ஆளுக்கு
ஒரு
பீஸ் எடுத்துக்கோங்க.

3 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

//சூப்பரான கேரட் கேக் தயார் வாங்க ஆளுக்கு
ஒரு பீஸ் எடுத்துக்கோங்க//

ஆஹா ..இவ்வளவு அருமையான கேக் ஒரு பீசா ..எல்லாம் எனக்கே..

சூப்பர் ..இது வரை கேள்வி படாத கேக்..

அஃப்ஸர் நிஷா சொன்னது…

{ஆஹா ..இவ்வளவு அருமையான கேக் ஒரு பீசா ..எல்லாம் எனக்கே..}

உங்களுக்கு இல்லாததா ஜெய் அப்படியே ப்ளேட்டோட
எடுத்துக்கோங்க..

உங்கள் வருகைக்கு கருத்துக்கு நன்றி நன்றி.....

priya சொன்னது…

rich cake srilankan style ricepe pl

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்