Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஜனவரி 15, 2010

நயன்தாரா-த்ரிஷாதெலுங்குப் படம்



ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் தயாரிப்பாளர்கள் தயாரித்து, நயன்தாரா - த்ரிஷா நடித்துள்ள படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கானா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்த 'அடூர்ஸ்' தெலுங்குப் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.

ஆனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இந்தப் படம்வெளியாகக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் தெலுங்கானாமாணவர்கள். இதே போல த்ரிஷா - வெங்கடேஷ் நடித்துள்ள 'ஓம் நமோவெங்கடேசா' படத்தையும் திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர்கள் ஒட்டு மொத்தமாக ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களை போராட்டக் குழுவினர் தாக்கி வருகிறார்கள்.

தெலுங்கு படப்பிடிப்புகளிலும் நுழைந்து ரகளை செய்கின்றனர். இதனால்சத்தமின்றி சென்னை மற்றும் தமிழகத்தில் தெலுங்குப் படப்பிடிப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள அடூர்ஸ்வெளியாகிறது. திரிஷா - வெங்கடேஷ் ஜோடியாக நடித்துள்ள 'ஓம் நமோவெங்கடேசா' படமும் வெளியாக உள்ளது.

இவற்றின் தயாரிப்பாளர்கள் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும்ஜூனியர் என்டிஆரும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

எனவே தெலுங்கானா பகுதிகளில் இந்தப் படங்களைத் திரையிட எங்கள் கட்சி அனுமதிக்காது என்று தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகரராவ் மகள் சவிதா அறிவித்துள்ளார்.

தெலுங்கானா பகுதி கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையில், "அடூர்ஸ் ஓம் நமோ வெங்கடேசா படங்களை எடுத்துஇருப்பவர்கள் ஒன்றுபட்ட ஆந்திராவை ஆதரிப்பவர்கள். எனவே அந்தபடங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்