Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வெள்ளி, ஜனவரி 15, 2010
துபாய் தமிழ்ப் பெண்கள்
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க ஆண்டு விழா, பொங்கல் கொண்டாட்டம், இந்திய குடியரசு தின விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த 8ம் தேதி பர்துபாய் ரமதா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் ஸ்ரீதேவி சிங்காரவேலன் மற்றும் உஷா பஞ்சாபகேஷன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். செயலாளர் மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்றார். இந்திய தூதர் வேணு ராஜாமணி, அவரின் துணைவி சரோஜ் தாப்பா, புகைப்படக்கலைஞர் காலி ஜால் மற்றும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். குழந்தைகள் பங்கேற்ற நடன, நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனந்த் சுப்ரமண்யம், ஸ்ரீராம் சீனிவாசன், பிரணவ் ஆனந்த் மற்றும் அபினவ் ஆனந்த் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விஷாலாட்சி சங்கர் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை மீரா ஸ்ரீ காந்த் தொகுத்து வழங்கினார். துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் தலைவியாக மீனாட்சி காந்தி அனைவரையும் வரவேற்றார்.
நன்றி தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக