Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

ஞாயிறு, ஆகஸ்ட் 01, 2010

ராஜ்மா ஹமூஸ்

ஹமூஸ் எனும் உணவுவகை அரேபியர்களில்
உணவுகளில்
ஒன்று இந்த உணவை அவர்கள்
எல்லாவகையான
ரொட்டிகளுடன் சேர்த்து
சாப்பிடுவார்கள்
குபூஸ்வுடன்
இதை சேர்த்து
சாப்பிட்டால்
அருமையாக இருக்கும்
குழந்தைங்க
கூட
விரும்பி சாப்பிடுவார்கள் சத்தான
உணவு.

தேவையான பொருள்கள்:
-------------------------------
ராஜ்மா-1கப்
ஆலிவ்
ஆயில்-1/4கப்

உப்பு
-தேவையான அளவு

மிளகு
தூள்-1/2டீஸ்பூன்

பூண்டு
-3பல்

தஹினா
(tahina) -3டீஸ்பூன்(வெள்ளை எள்ளு பேஸ்ட்)

பப்பரிக்கா
பவுடர்-1/2டீஸ்பூன்

சீரகத்தூள்
-1/4டீஸ்பூன்(வறுத்து பொடித்தது)

எலுமிச்சம்
பழம்-1 பெரியது



செய்முறை
:

--------------
முதலில் ராஜ்மாவை குக்கரில் அவித்து எடுத்து ஆறவிடவும்.

பின்
பூண்டின் தோலை நீக்கி அதை சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
சுட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு அவித்து
எடுத்துக்
கொள்ளவும்.
அதன் பிறகு ஆறிய ராஜ்மா,பூண்டு,
தஹினா
எல்லாவற்றையும்
மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.

அரைத்ததை
ஒரு பவுலில் போடவும் பின் எலுமிச்சை சாறு

ஆலிவ்
ஆயில்,மிளகு தூள்,பப்பரிக்கா பவுடர்,சிரகத்தூள்,

உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

சுவையான அருமையான சத்தான ஹமூஸ் ரெடி.


இதனை எல்லாவகை ரொட்டிக்கும் பிரட்டுக்கும் தொட்டு
சாப்பிட அருமையாக இருக்கும்.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

ராஜ்மா ஹமூஸ் பார்க்க அழகா இருக்கு
சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நல்லாயிருக்குமா காரமா இருக்குமா
பப்பரிக்கா இல்லை என்றால் மிளகாய் தூள் சேர்க்கலாமா....

அஃப்ஸர் நிஷா சொன்னது…

சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நல்லாயிருக்குமா..

சப்பாத்தியுடன் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

காரமா இருக்குமா பப்பரிக்கா இல்லை என்றால் மிளகாய் தூள் சேர்க்கலாமா....

காரம் இருக்காது பூண்டை அப்படியே சேர்த்தால் தான் தொண்டையில் எறுச்சல் உண்டாக்கும்
அவித்தோ சுட்டோ சேர்த்தால் காரம் இருக்காது மிளகு தூளில் அவ்வளவா காரம் இருக்காது பப்பரிக்கா இல்லை என்றால் சேர்க்க வேண்டாம் சேர்க்காமலேயே நல்லாயிருக்கும்

அஃப்ஸர் நிஷா சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஸ்ரின்...
:-))

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஜெய்லானி இப்பொழுது கருத்து போட வருது நீங்கள் வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும் நன்றி ஜெய்லானி...
:-)

ஜெய்லானி சொன்னது…

//பூண்டின் தோலை நீக்கி அதை சுட்டு எடுத்துக் கொள்ளவும். சுட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு அவித்து
எடுத்துக் கொள்ளவும்//

இதில் பூண்டை சுட்டு செய்தால் வரும் ருசி அவித்து செய்வதில் வருவதில்லை.

ஹமூஸ் வாவ் சூப்பர் ..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

\இதில் பூண்டை சுட்டு செய்தால் வரும் ருசி அவித்து செய்வதில் வருவதில்லை/

ஆம் ஜெய்லானி பூண்டை சுட்டால் வரும் மணம் இருக்கே சூப்பர் மணம்
அவித்தால் அந்த மணம் வராது நான் எப்போதும் சுட்டுதான் சேர்ப்பேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்