படம்: பையா
பாடல்: பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: பென்னி தயால்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோட பாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
(பூங்காற்றே பூங்காற்றே …..)
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
(பூங்காற்றே பூங்காற்றே …..)
அழகான நதி பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே
(என் நெஞ்சோடு…..)
(பூங்காற்றே பூங்காற்றே…..)
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக