Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 14, 2010

கமல் தொடர்ந்து நடிப்பது



50 ஆண்டுகள் தொடர்ந்து நான் நடிப்பது புல்லரிக்க வைப்பதாகக் கூறுகிறார்கள்... எனக்கு அரிப்பு இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன், என்றார் கமல் ஹாஸன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

முதல் சிடியை ரஹ்மான் வெளியிட கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அனைவருமே சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டனர். ஆனால் படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் மட்டும் 'ரொம்பப் பேசினார்'. கிட்டத்தட்ட இந்தப் படம் அவரது சொந்தக் காதல் கதை போலிருக்கிறது.

"நான் திரையுலகுக்கு வந்து 50 வருடம் ஆவதாகவும், 50 ஆண்டுகளுக்கு முன் லைட்ஸ் ஆன் என்பதைக் கேட்டபோது இருந்த புல்லரிப்பு இன்றும் தொடர்வதாகவும் குறிப்பிட்டனர். எனக்கும் அந்த அரிப்பு இருப்பதால்தான் இன்னும் நடிக்கிறேன்.

சிம்பு சிறுவயதில் இருந்தே நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைத்தாலும் புல்லரிக்கிறது. சிம்பு சொன்னமாதி அழகாக உள்ளார் த்ரிஷா. இசையும் சிறப்பாக உள்ளது", என்றார்.

விழாவில் பேசிய சிம்பு, "நான் இந்தப் படத்தில் அழகாக இருப்பதாகக் கூறினார்கள்... நான் எப்பவுமே அழகாகத்தான் இருக்கேன்!" என்று தமாஷ் பண்ணார்.

இந்தப் படத்தின் 3 பாடல்களை திரையிட்டனர். முன்னதாக இந்தப் பாடல்களை ரஹ்மான் இசைக் குழுவினர் லைவாக பாடிக் காட்டினர்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்