படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்
பாடியவர்: ஹரிசரன், ப்ரேம்ஜி அமரன்
ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
ஹரிசரன்:ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ப்ரேம்ஜி:ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும்,,,,
ஹரிசரன்:இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
ப்ரேம்ஜி:உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
ஹரிசரன்:நெஞ்சோடு பாரம் கண்டால்
ப்ரேம்ஜி:தூரத்தில் தூக்கிப்போடு
ஹரிசரன்:நெஞ்சோடு ஈரம் கண்டால்
ப்ரேம்ஜி:இன்னொரு பெண்ணைத்தேடு
ஹரிசரன்:ஓடம் போகும் பாதை ஏது
ப்ரேம்ஜி:வானில் மிதக்கலாம்
ஹரிசரன்:வலிக்கிற வார்த்தை ஏது
ப்ரேம்ஜி:எண்ணம் மறக்கலாம்
ஹரிசரன்:எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்
ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும் நீயும் நானும்,
நீயும் நானும்
ஹரிசரன்:ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ப்ரேம்ஜி:ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
ஹரிசரன்:கல்வெட்டாய் வாழும் காதல்
ப்ரேம்ஜி:அழித்திட வேண்டும் நீயே
ஹரிசரன்:காற்றாற்றில் நீச்சல் காதல்
ப்ரேம்ஜி:கைத்தர வந்தேன் நானே
ஹரிசரன்:ஏற்காமல் போனாள் ஏனோ
ப்ரேம்ஜி:சோகம் எதற்குடா
ஹரிசரன்:ஆறாத காயம் தானோ
ப்ரேம்ஜி:காலம் மருந்துடா
ஹரிசரன்:உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
ஹரிசரன்:ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ப்ரேம்ஜி:ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக