படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்
பல்லவி
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...
சரணம்-1
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
சரணம்-2
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..
ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னும் நிறைய போடுங்கள் உங்கள் சைட் சூப்பர் உங்க குறிப்பும் சூப்பர் தொடருங்கள் வாழ்த்துக்கள்
ஹாய் VMSM உங்கள் கருத்துக்கு நன்றி நீங்கள் கேட்டது போல் நிறைய பாடல் வரிகள் போடுகிறேன்
கருத்துரையிடுக