
தேவையான பொருள்கள்:
ஓட்ஸ்-1கப்
கேரட்-1சிறியது
பீன்ஸ்-7
பச்சை பட்டாணி-1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-1
தண்ணீர்-1/2கப்
பச்சை மிளகாய்-2
மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்
மிளகாய் பொடி-1/4டீஸ்பூன்
தனியா பொடி-1/4டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பூண்டு-2பல்
எண்ணை-2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நறுக்க வேண்டிய அனைத்தையும்
நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
காடாயை சூடு படுத்தி அதில் ஓட்ஸ்சை போட்டு
வறுக்கவும் நன்கு வாசனை வந்ததும் கருக
விடாமல் சிவக்க விடாமல் அடுப்பை சிறிதாக
வைத்தே வறுக்கவும் வறுத்ததை தனியாக
எடுத்து வைக்கவும்.
அதே காடாயில் எண்ணை விட்டு கடுகு
போட்டு வெடித்ததும் வெங்காயம்,பூண்டு
போட்டு வதக்கவும் வதங்கியதும் தக்காளி,
ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் காய்கள்
எல்லாவற்றையும் அதில் போட்டு வதக்கவும்.
பின் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து
உப்பு போட்டு காய்களை வேக விடவும்.
எல்லாம் நன்கு வெந்த உடன் ஓட்ஸை அதில்
சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
இந்த கிச்சடி நன்றாக இருக்கும் ஆரோக்கியமான
கிச்சடியும் கூட சுவையான ஓட்ஸ் கிச்சடி ரெடி.
2 கருத்துகள்:
ஹாய் நிஷா எப்படி இருக்காப்பா. எனக்கு ஒரு சந்தேகம். பப்ஸ் செய்ய எனக்கு தெரியாதுபா. உனக்கு தெரிந்தா நீ செய்து போட்டோ உடன் போடுப்பா. நான் செய்து பார்க்கிரேன்.
ஹாய் சோனியா நலம்பா நீ நலமா?
ஓகேப்பா நான் சீக்கிராமே பப்ஸ் செய்து
உனக்கு போட்டோ உடன் போடுகிறேன்
ஓகேயா
கருத்துரையிடுக