
தேவையான பொருள்கள்:
பன்னீர்--200கிராம்
தக்காளி--1பெரியது
வெங்காயம்--1
இஞ்சி,பூண்டு விழுது--1டீஸ்பூன்
குடை மிளகாய்--1பெரியது
மிளகாய் பொடி--1டீஸ்பூன்
கரம் மசாலா--1/4டீஸ்பூன்
மஞ்சள் பொடி--1/4டீஸ்பூன்
தனியா பொடி--1/2டீஸ்பூன்
உப்பு--தேவையான அளவு
எண்ணை-3டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நறுக்க வேண்டியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் கொஞ்சம் வதங்கினால் போதும் பின் அதில்
குடை மிளகாய்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
எல்லாம் வதங்கியதும் அரைத்து வைத்து இருக்கும்
தக்காளியை அதில் ஊற்றவும்.

எல்லாம் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும் பின்பு
பொடிகள் அனைத்தையும் அதில் சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 10நிமிடம்
கொதிக்கவிடவும்.

கொதித்ததும் பன்னீர் போட்டு கிளறவும் கிளறி
5நிமிடம் மூடி வைத்து எல்லாம் சேர்ந்து வெந்ததும்
இறக்கவும்.

இதை சப்பாத்தியுடன் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்
சமைக்கும் நேரமும் கம்மிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக