
தேவையான பொருள்கள்
கடலைப் பருப்பு-1கப்
பாசிப் பருப்பு-1கப்
வெல்லம் தூள்-1 1/2கப்
ஏலக்காய்- 1ஸ்பூன்
தேங்காய் துருவியது-1கப்
நெய்- 2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
பருப்புகள் இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
ஊறியதும் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த பருப்புக்களை
இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கவும் வெந்ததும்
எடுத்து ஆறவைத்து உதிர்த்தி கொள்ளவும் வெல்லத்தை 1/2கப் தண்ணீர்
விட்டு அடுப்பில் வைத்து கரைத்து நன்கு கொதிக்க விடவும் பின் அதில்
நெய்,தேங்காய் துருவல்,ஏலக்காய் தூள்,உப்பு,சேர்த்து கொதிக்கவிடவும்
பின் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும் உதிரியாக வந்ததும்
இறக்கவும். குழந்தைகளுக்கு இதை சாப்பிட கொடுத்தால் குழந்தைங்க
நல்லா புஷ்டியாக வருவார்கள் பருப்பு சேர்த்து இருப்பதால் ஆரோக்கியமும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக