
தேவையான பொருள்கள்
கம்பு-1கப்
அரிசி-1கப்
உளுந்து- 1/2கப்
அவல்- 1/2கப்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
அரிசி,கம்பு,உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து ஊறவிடவும்
அவலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொஞ்சம் ஊறவிடவும்
பின் ஊறவைத்த எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்
அரைத்த கலவையை 6மணி நேரம் வைக்கவும் இந்த மாவு
சீக்கிரம் புளித்துவிடும் இட்லி மாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து
கரைத்து இட்லி தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.

இதே மாவில் தோசையும் செய்யலாம் தோசைக்கு
கரைப்பது போல் கரைத்து தோசை ஊற்றவும்
சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம் ஆரோக்கியமான டிபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக