ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய 'ஆயிரத்தில் ஒருவன்' பொங்கலுக்கு வெளியானது. இப்படத்தின் முதல் பகுதியான இடைவேளைவரை படம் பிரமாண்டமாகவும் ரசிக்கும் வகையிலும் உள்ளது. ஆனால் இடைவேளைக்குப்பிறகு படத்தின் கதை புரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சோழ மன்னனாக வரும் பார்த்திபன், வரும் பெரும்பாலான காட்சிகள் புரியாமல் போகின்றன. இதையடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. காட்சிகளுடன் இருபாடல் காட்சிகளும். சில ஆபாச காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.
மொத்தம் மூன்று மணி நேரம் ஓடும் இப்படத்தின் நீளத்தை குறைக்கப்பட்டதன் மூலம் ரசிகர்களுக்கு கதையில் எந்த குழப்பமும் ஏற்படாது என்கின்றனர் படக்குழுவினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக