Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 16, 2010

மாசு மருவற்ற முகம்

சிலர் அழகாக இருந்தாலும், முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி, அவர்களின் அழகை கெடுக்கும் விதத்தில் இருக்கும். முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று, சிலரது சருமத்தின் தன்மையால்,மெலனின் சுரப்பு அதிகமாக இருப்பதால், உண்டாகும் கரும்புள்ளிகள். மற்றொன்று, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றால் உண்டாகும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் எதனால் ஏற்படுகின்றன என்பது பற்றிய டிப்ஸ் இதோ உங்களுக்காக…

ஹார்மோன் மாற்றங்கள்:
சிலருக்கு, ஹார்மோன் மாற்றங்களால், கரும்புள்ளிகள் தோன்றும். கர்ப்பிணிகள், கல்லீரல் சீராக செயல்படாமை, வைட்டமின் “ஏ’ மற்றும் “பி12′ பற்றாக்குறை போன்றவற்றாலும், கரும்புள்ளிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.


புறஊதாக்கதிர்கள் தாக்கம்:

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள், தோலில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. மாநிறமாக இருப்பவர்களே இத்தகைய தாக்குதலுக்கு அதிகமாக இலக்காகின்றனர். அதிகமாக வெயிலில் சென்றால், சிறிய புள்ளிகளும் முகத்தில் தோன்றும்.

கடும் உராய்வு:
தொடர்ந்து கண்ணாடி அணிவது மற்றும் அடிக்கடி முகத்தை தேய்க்கும் பழக்கம் உடையவர்கள் ஆகியோருக்கும் தொடர் உராய்வினால், கரும்புள்ளிகள் தோன்றும்.

அலர்ஜி:
பெர்ப்யூம்கள், ஹேர்-டை, ஹேர்-ரிமூவல் கிரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களால் உண்டாகும் அலர்ஜியினாலும் கரும்புள்ளிகள் ஏற்படும்.


பருக்கள்:

பருக்கள், அம்மை, படை மற்றும் தோலில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றால், தோலில் கரும்புள்ளிகள் மற்றும் ஆழமான தழும்பு ஏற்பட்டு விடுகிறது.


இவற்றில் இருந்து விடுபட வழி:

தோலில், கரும்புள்ளிகள் காணப்படுபவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண, சிறந்த தோல் சிகிச்சை நிபுணரை அணுகலாம். உங்கள் பிரச்னை என்ன என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வை தேர்ந்தெடுக்கலாம், கரும்புள்ளியின் தன்மையை பொறுத்து, மருத்துவ சிகிச்சை அல்லது அழகு சாதன சிகிச்சை போன்றவை மேற்கொள்ளலாம்.


சாதாரண கரும்புள்ளியாக இருந்தால், அவற்றிற்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சில சிகிச்சை முறைகள்:

*ஐந்து பாதாம் பருப்புடன், ஒரு டீஸ்பூன் பிரஷ் கிரீம், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் துருவிய உருளைக்கிழங்கு, அரை டீஸ்பூன் முல்தானி மட்டி போன்றவற்றை சேர்த்து, நன்றாக அரைத்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். பின், 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் நல்ல மாற்றம் ஏற்படும்.
* முள்ளங்கியின் சாறை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும்.
* அதேபோல், எலுமிச்சை சாறுடன், இரண்டு டீஸ்பூன் வெள்ளரிசாறு , ஒரு டீஸ்பூன் குளிர்ந்த பால் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
* உருளைக்கிழங்கு, வெள்ளரி மற்றும் தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அவற்றை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கரும்புள்ளிக்கு “குட்பை’ சொல்லிவிடலாம்.

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்