Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

ஞாயிறு, ஜனவரி 17, 2010

திருமணத்துக்குப் பின் சானியா

புது தில்லி, ஜன. 15: திருமணத்துக்குப் பின் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவேன் என டென்னிஸ் தாரகை சானியா மிர்சா தெரிவித்தார்.÷சானியா மிர்சாவுக்கும், அவரது நீண்ட கால நண்பர் சோரப் மிர்சாவுக்கும் நிச்சயதார்த்தம் 2009 ஜூலையில் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடுவது சானியாவின் விருப்பத்தைப் பொருத்தது என அப்போது சோரப் கூறியிருந்தார். திருமணம் எப்போது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.÷இந்நிலையில் சானியா மிர்சா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:÷திருமணத்துக்குப் பின் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். எனினும், அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. 7 ஆண்டுகள் தொழில் முறையில் டென்னிஸ் போட்டியில் விளையாடியுள்ளேன். ஒற்றையர் பிரிவில் 5 ஆண்டுகள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளேன். ÷இந்நிலையில் ஓரிரு ஆட்டங்களை வைத்து எனது ஆட்டத் திறனை எடை போடக் கூடாது.÷220-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், முதல் 10 இடங்களுக்குள் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை.÷2010-ல் காயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.÷ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டம், பட்டாயாவில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது, ஒசாகா, பிர்மிங்ஹாமில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது, அமெரிக்காவில் ஐடிஎஃப் பட்டம் வென்றது, கனடா போட்டியில் இறுதி வரை முன்னேறியது, பர்டோலி, ஷஹார் பீர் போன்ற முன்னணி வீராங்கனைகளை வென்றது, பான்டி வெட்ரா பீச் போட்டியில் இரட்டையர் பட்டம் வென்றது என 2009-ல் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்.÷காயத்துக்குப் பிறகு 120-வது இடத்துக்குத் தள்ளப்பட்டேன். அதிலிருந்து 57-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சானியா.÷கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் சானியா. கடந்த ஆண்டு மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்