Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 14, 2010

விஜய்யின் ஐம்பதாவது பட டிஸ்கசன்




விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'வேட்டைக்காரன்' படம் அவரது 49 வது படமாம். அடுத்து வெளிவரப்போகும் தனது 50 வது படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக கதை டிஸ்கசன் செய்வதற்கு தனது ஆஸ்தான டைரக்டர்கள் ஆன பேரரசு,பிரபு தேவா இவர்களோடு பாலா,அமீர், சேரன் ஆகியோரையும் அழைத்து இருந்தார். விஜய்யின் P.A வும் உடன் இருந்தார்.அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது கிடைத்தவை இவை. (இது முழுக்க முழுக்க கற்பனையே. இது கண்டிப்பாக யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை ஆகவே படித்து சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்)விஜய : எல்லோருக்கும் வணக்கம்ணா. எப்படியோ அடிச்சி புடிச்சி நானும் 49 படம் நடித்துவிட்டேன். அடுத்த படம் நம்மளோட 50 வது படங்கன்னா. அதான் உங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கிறேன். எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது கதை இருந்தா சொல்லுங்கண்ணா நாம படம் பண்ணலாம்.டைரக்டர்கள் : (மனதிற்குள்) உன் படத்துக்கெல்லாம் எதுக்குடா கதை. உன்னோட எந்த படத்துல கதை இருந்திருக்கு.விஜய் : பிரபுதேவா சார் நீங்க மொதல்ல சொல்லுங்க.பிரபு : போக்கிரி படத்துல உங்களை போலீசாக காட்டியாச்சு. வில்லு படத்துல உங்கள ராணுவ மேஜர் ஆக காட்டியாச்சு. அதனால இந்த படத்துல உங்கள "Interpol Officer " ஆக காட்டாலம்னு இருக்கேன்.விஜய் : "Interpol Officer" ஆ குட் மேலச் சொல்லுங்க.P.A : சார் ஏற்கனவே வில்லு படம் பார்த்தவங்க எல்லாம் உங்க ராணுவ மேஜர் கெட்டப்ப அவங்க தெரு கூர்க்கா கெட்டப்போட மேட்ச் பண்ணி உங்களை நாரடிச்சாங்க. இப்ப "Interpol Officer " ஆ வேணாம் சார்.விஜய் : இருய்யா கதை என்னன்னு கேட்போம். பிரபு படத்தோட பெயர் மற்றும் கதையை ரெடி பண்ணீட்டிங்களா?பிரபு : நம்ம காம்பிநேஸன்ல ஏற்கனவே வந்து வெற்றி அடைந்த படம் போக்கிரி. ஸோ இந்த படத்திற்கு நாம பக்கிரின்னு பெயர் வைக்கலாம். உங்க ஹேர் ஸ்டைல்க்கும் இந்த பெயருக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும்.மேலும் Opening song உம் ரெடி பண்ணீட்டேன். கேளுங்க( போக்கிரி ஸ்டைலில் பாடவும் )ஓடுங்கடா தியேட்டரை விட்டுநான் செவென் ஒ' கிளாக் மொட்ட பிளேடுபேசப் போறேன் பன்ச் டயலாக்குநீ காதைக் கொஞ்சம் மூடி கோடாP.A : சார் இந்த ஆளு ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல.ஏற்கனவே இந்த ஆளோட அண்ணன் அஜித்தை வச்சு ஏகன் படம் எடுத்து அவரை மூளைல உக்கார வச்சுட்டாரு. இவனோ ஏற்கனவே உங்களை வச்சு வில்லு படம் எடுத்து உங்களை காமெடி பீஸாக்கிட்டான். குடும்பமே குருப்பாத் திரியுரானுங்க ஜாக்கிரதை.விஜய் : (அதுவும் சரிதான்யா) பிரபு நீங்க கொஞ்சம் வெளியில வெய்ட் பண்ணுங்க. நான் பேரரசு கிட்டயும் கதை கேட்டுக்கிறேன். நீங்க சொல்லுங்க பேரரசு உங்க கதையை.பேரரசு : சார் படத்தோட பெயரை கோமாளிப்பட்டி ன்னு வைக்கலாம்னு இருக்கேன்விஜய் : என்னது கோமாளிப்பட்டியா ? யோவ் சும்மாவே நான் டான்ஸ் ஆடுறதப் பார்த்து நிறையபேரு என்ன கோமாளி மாதிரி ஆடுறான்னு சொல்றாங்க. இந்த லட்சணத்துல இப்படி ஒரு பெயர் தேவையா.பேரரசு : இல்ல சார். வழக்கமா நான் ஏதாவது ஊரோட பேரைத்தான் என்னோட படத்துக்கு தலைப்பா வைப்பேன். போன வாரம் எங்க ஊருக்கு போகும்போது இப்படி ஒரு ஊர்ப்பெயரைப் பார்த்தேன். அந்த பெயரைப் பார்த்ததும் எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. அப்பவே முடிவு பண்ணீட்டேன். உங்களை வச்சு மறுபடியும் படம் எடுத்ததா இந்த பெயரைத் தான் வைப்பதென்று.விஜய் : எல்லாம் என் நேரம்யா. நீ எல்லாம் என்ன நக்கல் பண்ற அளவுக்கு என்னோட நிலைமை மோசமாயிடுச்சு. சரி கதையை சொல்லித் தொலை.பேரரசு : கதை என்ன சார் சுண்டைக்காய் கதை. "Opening song" ஆ நானே எழுதியிருக்கிறேன் இத முதல்ல கேளுங்க.(கில்லி ஸ்டைலில் படிக்கவும்)செருப்ப எடுத்து ஒளிச்சி வைடா வைடாவிளக்கமார எடுத்து மறைச்சி வைடா வைடாஎன் படத்த பார்த்து கண்ணா பின்னான்னு திட்டாதடாஏய் கோமாளி.. ஏய் கோமாளி.. நான் கோமாளி டாவிஜய் : பாரு எவனாவது படத்தோட கதையை சொல்றாங்களா. ஆனா opening song ஆ மட்டும் எழுதி வச்சிக்கிட்டு வெறுப்பேத்துறாங்க.P.A : பாஸ் இதெல்லாம் நமக்கு புதுசா என்ன. அப்பப்ப ஷூட்டீங்குல என்ன தோணுதோ அதத்தான படம் எடுத்து மக்களை கொல்றோம்.விஜய் : சரி சரி உண்மையச் சொல்லாத. இந்தப் பேரரசுப் பய என்ன ஓவரா நக்கல் பண்ணீட்டான். அவன நீ மேல உள்ள ரூமிற்கு கூட்டிட்டு போயி சேர்ல கட்டிப்போட்டு நான் நடிச்ச 48 பட DVD யையும் போட்டுக் காட்டு.P.A : கொலைக் கேசுல உள்ள போயிருவிங்க பரவாயில்லையா?விஜய் : ஒ அப்படி ஒன்னு இருக்குல்ல. சரிவிடு இவன அப்புறம் பார்த்துக்கலாம். சேரன் சார் நீங்களாவது கதையைச் சொல்லுங்கசேரன் : விஜய் உங்க வாழ்க்கையில நீங்க சந்தித்த நான்கு பெண்களின் பற்றின கதை.P.A : சார் இவனுக்கு ஆட்டோகிராப்புல இருந்து இதே வேலையத் திரியுறான். மீதி கதையை நானே சொல்வேன். உங்க தலை முடிய நல்லா படிய வாரிவிட்டு உங்களுக்கு ஒரு கண்ணாடிப் போட்டுவிடுவான். அப்புறம் ஒவ்வொரு பெண்களாக நினைத்து நீங்க கண்ணாடிய கழ்ட்டி கண்ணீர் விடுவதுதான் கதை. ஏற்கனவே உங்க படங்கள பார்த்து மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகுறாங்க.இந்த லட்சணத்துல நீங்களும் அழுதா பார்க்கவே சகிக்க முடியாது.விஜய் : அமீர் சார் உங்க கதை.அமீர் : பருத்தி வீரன் ஸ்டைல்ல ஒரு சூப்பர் கிராமத்து சப்ஜெக்ட் இருக்கு. ஆனா அதுக்கு நீங்க கெட்டப் மாத்தவேண்டியிருக்கும்.விஜய் : நான் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்துக்காக கெட்டப் எல்லாம் மாத்திதான் நடித்து வருகிறேன்.அமீர் : அப்படி என்ன கெட்டப் சார்.விஜய் : சஸ்பென்ஸ்சாக இருக்கட்டும்னு பார்த்தேன் சரி இருந்தாலும் சொல்கிறேன். இந்த படத்துல நான் புல்லா மீசை வச்சு நடிக்கிறேன். வேணும்னா உங்க படத்துல மீசையை எடுத்து புது கெட்டப் பண்ணீடலாம்.( இதைக் கேட்டு அமீர் மயக்கம் போட்டு கிழே விழுகிறார். இந்த கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாலா சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறார் )விஜய் : என்னையா எல்லாரும் இப்படி தெறிச்சு ஓடிட்டானுங்க.P.A : பேசாம நீங்க உங்க அப்பாவை வைச்சே படம் எடுக்கலாம். அவர்தான் உங்களை பற்றி நன்றாக தெரிந்து வைத்து படம் எடுப்பவர்.விஜய் : என்னையா சொல்ற ?P.A : ஆமாம் உங்க ஆரம்ப காலப் படங்களான ரசிகன்,விஷ்ணு போன்ற படங்களில் உங்களை நம்பி படம் எடுத்தால் கண்டிப்பாக படம் ஊத்திக்கும்நு தெரிஞ்சி ஹீரோயின் நம்பி படம் எடுத்து வெற்றி அடையச் செய்தவர். அதனால அவரையே டைரக்டராகப் போடலாம். அப்புறம் மறுபடியும் சங்கவியை உங்க படத்துல நடிக்க கூப்பிடலாம். அப்புறம் நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா " டைப்புல ஒரு கருத்து பாட்டு பாடி ஸ்க்ரீன்க்கு கிழே இந்த தத்துவப் பாடலைப் பாடி கொண்டிருப்பவர் உங்கள் விஜய்ன்னு போட்டு அசத்தலாம். படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டுதான்.விஜய் : அதுவும் சரிதான்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்