மெல்போர்ன்,ஜன.9: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியரான ஜஸ்பிரீத் சிங் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அவரது மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகவே அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னின் வடமேற்குப் பகுதியான எஸ்செடோனில் ஜஸ்பிரீத் சிங் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் சனிக்கிழமை விருந்து ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் மனைவியைவிட்டு விட்டு காரை நிறுத்துவதற்கு ஜஸ்பிரீத் சிங் சென்றுள்ளார்.
நன்றி:தினதந்தி
இந்நிலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு காருக்குள் இருந்து வெளியே வந்த ஜஸ்பிரீத் சிங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் அவர் மீது ஆசிட்டை வீசி தீயை பற்றவைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
ஆசிட் வீசியதில் பலத்த காயம் அடைந்த ஜஸ்பிரீத் சிங் அலறி துடித்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கததார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த வன்முறையில் 4 பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை என்று அந்நாட்டு போலீஸôர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இனவெறிச் செயல் அல்ல என்று கூறியுள்ள அவர்கள், குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கை துரிதப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஆஸ்திரேலியாவில் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடுரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் மற்றொரு இந்தியர் ஒருவர் மீது ஆசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் அமைப்பு, ஆஸ்திரேலிய அரசு இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா கண்டனம்: இந்தியர் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியர் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.
ஜஸ்பிரீத் சிங் என்ற இந்தியர் மீது ஆசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் அளித்துவிட்டனர். ஜஸ்பிரீத் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், அவரது உடல்நிலை சீராகவுள்ளதாகவும் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை மத்திய அரசு தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தை இரு அரசுகளுமே தீவிரமாக கையாளுவதால் ஊடகங்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும். உணர்வுப்பூர்வமாகச் செய்திகளை வெளியிடுவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வழி ஏற்படுத்திவிடும் என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக