
தேவையான பொருள்கள்:
-------------------------------
கோதுமை மாவு-1/2கப்
ராகி மாவு-1/4கப்
கொள்ளு மாவு-1/4கப்
எண்ணை-3தேக்கரண்டி
சீனி-5டீஸ்பூன்
முட்டை-1வெள்ளை கரு மட்டும்
வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்
கெலாக்ஸ்-3டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

----------------
முதலில் எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும்.
அதன் பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,கெலாக்ஸ்
எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெண் கரு,எண்ணை,
சீனி எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
பின் அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கவும்
அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில் எண்ணை
தடவி அதில் கேக் கலவை ஊற்றவும் அதன் மேல் சிறிது
கெலாக்ஸை தூவி பின் 250 *F -ல் 25 நிமிடம் பேக் செய்யவும்.

4 கருத்துகள்:
கேக் பார்க்கும் போதே அருமையா இருக்கு..!!!
ஓரே நேரத்தில ஏழு எட்டுன்னு தின்னா அது டயட் லிஸ்டில வருமா ?..!!
:-)
ஓரே நேரத்தில ஏழு எட்டுன்னு தின்னா அது டயட் லிஸ்டில வருமா ?..!!
அது எப்படிப்பா ஏழு எட்டுன்னு சாப்பிட முடியும்
முன்று துண்டு கேக் சாப்பிட்டால் டயட்.
இல்லாவிட்டால் அது டயட் ஆகாது இப்போ சாதாரணமான கேக் ஓரு சின்ன பீஸ் சாப்பிடுவதும் டயட் கேக் 3அல்லது 4 பீஸ் சாப்பிடுவதும் ஒன்று.
டயட் கேக் சாப்பிடுவதனால் கலோரியின் அளவு குறைவாக கிடைக்கும்.
கேக் பார்க்கும் போதே அருமையா இருக்கு..!!!
ரொம்பா ரொம்பா நன்றி நீங்களும் செய்து சாப்பிட்டு
பாருங்க சாப்பிடவும் அருமையாக சுவையாகவும் இருக்கும்.
கருத்துரையிடுக