தேவையான பொருள்கள்:
சேனைக் கிழங்கு-1/4கிலோ
தக்காளி-பெரியது 1
சோம்பு-1டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி,தனியா பொடி மிக்ஸ்-11/2டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-தேவையான அளவு
அரைக்க வேண்டியவை:
தக்காளி,சோம்பு,மிளகாய் பொடி,உப்பு
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கு,உப்பு,மஞ்சள் பொடி
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.
வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி அரைத்த விழுதை
போட்டு வதக்கி பின் வேக வைத்த சேனைக்கிழங்கை
அதனுடன் சேர்த்து கிளறவும் நன்கு ஃப்ரை ஆனதும் இறக்கவும்.
சுவையான சேனைக்கிழங்கு ஃப்ரை ரெடி.
வழங்கியவர்:அனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக