
தேவையான பொருள்கள்:
பேபி கார்ன் -6
கடலை மாவு-1தேக்கரண்டி
சோள மாவு-2தேக்கரண்டி
அரிசி மாவு-1தேக்கரண்டி
மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்
மிளகு பொடி-1/2டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
மிளகாய் பொடி-1/4ஸ்பூன்
சிரகப் பொடி-1/4ஸ்பூன்
எண்ணை-பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
எல்லா மாவையும், எல்லா பொடிகளை
உப்பு சேர்த்து கெட்டியான பதத்தில் மாவாக
கரைத்து கொள்ளவும்.
அந்த மாவுக் கலவையில் பேபி கார்னை
போட்டு சேர்த்து கிளறி 15நிமிடம் வைக்கவும்.
பின் கடாயில் எண்ணை ஊற்றி சூடு வந்ததும்
பேபி கார்னை ஒவ்வொன்றாக போட்டு
பொறித்தெடுக்கவும்.
அதை சாஸ் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
குழந்தைங்க விருப்பி சாப்பிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக