Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், நவம்பர் 07, 2011

பொடுகுக்கான நிவாரணம்

பொடுகு:
வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, வெள்ளை முள்ளங்கி சாறு – இவற்றில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து குளிப்பதும் நல்லது.


பொடுகை போக்க...
4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.


பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

வேப்பிலை 2 கைப்பிடி

நல்ல மிளகு - 15-௨0


சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தா‌ல் ந‌ல்ல‌து.


பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுட‌ன் கண்டிஷனராகவும் இரு‌க்கு‌ம்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.


வாரம் இரு முறை ரொம்பவும் மிதமான ஷாம்பூ போட்டுக் கூந்தலை அலச வேண்டும். பிறகு கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். கண்டிஷனர் கூந்தலை சுற்றுப்புற மாசுகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
வாரம் இரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மற்றவர்கள் உபயோகிக்கும் டவல், சீப்பு மற்றும் கூந்தல் அழகு சாதனங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள். உங்களுக்கென தனியே ஒரு செட் வைத்துக்கொள்ளுங்கள்.
தலைமுடி ஈரமாக இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வாராதீர்கள்.
தலைமுடியைச் சிலர் நாறு மாதிரி ஈரமின்றிக் காய வைப்பார்கள். அது தவறு. ஈரம் சொட்டும் வரைக் காய வைத்தால் போதும். பிறகு அது தானாக, இயற்கையாகவே உலரட்டும்.
பெரிய, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் முடியை வாரவும்.
கூந்தலைச் சிக்கு எடுக்கும்போது எப்போதும் கீழிருந்துதான் மேல் நோக்கி எடுக்க வேண்டும்.
தலைமுடியில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் டைட்டான ஹேர் பேண்டுகள், கிளிப்புகள், போன்றவற்றை அணிந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும்.
ஒவ்வொரு முடியும் நான்காண்டுகள் இருக்கும். மாதத்திற்கு அரை அங்குலம் அளவிற்குத்தான் முடி வளரும்.
கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால் அவற்றை உடனே ட்ரிம் செய்துவிடுவதுதான் நல்லது.
கூந்தலை சுருளாக்கும், நிறம் மாற்றும் கெமிக்கல் பொருட்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.





கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்