தேவையான பொருள்கள்:
------------------------------------
கீரை-1கட்டு
வர மிளகாய்-3
கடுகு-1டீஸ்பூன்
டொஃபு-100கிராம்
எண்ணை-2டீஸ்பூன்
வெங்காயம்-1பெரியது
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
------------------
முதலில் கீரையை சுத்தம் செய்து எடுக்கவும்.
பிறகு வெங்காயம்,டொஃபு இரண்டையும் கட் செய்து
வைத்து கொள்ளவும்.
பின் காடயை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி
கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் டொஃபு சேர்த்து வதக்கவும்
டொஃப் உடயாமல் மெதுவாக வதக்கவும்
எல்லாம் வதக்கியதும் கீரை சேர்த்து வதக்கவும் டொஃபுயில் உள்ள தண்ணீரிலேயே கீரை வதங்கி
விடும் பிறகு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
எளிதான முறையில் செய்யக்கூடிய இந்த கீரை சமையல் ஆரோக்கியமான சமையலும் கூட
சிறுது நேரத்தில் சமையல் வேலை முடிந்து
விடும் டொஃபும் கீரையும் சேர்ந்து சாப்பிட
சுவையாக இருக்கும்.