தேவையான பொருள்கள்:
---------------------------------
சாதம்-இரண்டு கப்
வெங்காயம்-ஒன்று (பெரியது)
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
கேரட்-ஒன்று(துருவியது)
பட்டாணி-கால் கப்
முட்டை கோஸ்-கால் கப்
முட்டை-மூன்று
பீன்ஸ்-ஐந்து
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
குடை மிளகாய்-அரை கப்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
மிளகு தூள்-கால் டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
அஜினமோட்டோ-சிறிதளவு(விரும்பினால்)
எண்ணை-முன்று டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு-கால் டீஸ்பூன்(விழுது)
செய்முறை:
----------------
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
பின் கடாயை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் எண்ணை
விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும்
தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் குடை மிளகாய்,இஞ்சி,பூண்டு
போட்டு வதக்கவும் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்
பின் அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்களையும்
சேர்த்து வதக்கவும் எல்லாம் நன்கு வதங்கியது முட்டையை
உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும் அதனுடன் மிளகு தூள்,
மிளகாய் தூள் போட்டு கிளறவும்.
பிறகு அதனுடன் அஜினமோட்டோ சேர்த்து கிளறவும் நன்கு
கிளறியவுடன் சாதம் சேர்த்து எல்லாம் ஒன்று சேர கிளறவும்
பின் மேலே புதினா,மல்லி தூவி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்
வெஜ் ஃப்ரைட் ரைஸ் ரெடி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக