நானோ டெக்னாலஜி…
மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது,அதுதான் நானோ டெக்னாலஜி என்பது.நானோ டெக்னாலஜி என்பது மிக சிக்கலான தொழில்நுட்பம் தான் என்றாலும்,அதன் அடிப்படை என்ன, என்ற ஆரம்ப அடிச்சுவடியையாவது தெரிந்துகொண்டே ஆக வேண்டும். அதை தெரிந்து கொள்ள ஓரளவு கவனம் செழுத்தினால் போதும்.
அனைத்து எலக்ட்ரானிக் கருவிகள்
எரிசக்தி, கம்ப்யூட்டர், மருத்துவம், விவசாயம், கார் பாகங்கள் , ஆடை தயாரிப்பு என்று ஒரு துறையை கூட பாக்கி இல்லாமல் அனைத்துமே இனிமேல் நானோ தொழில்நுட்பத்தை தான் நம்பி இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே,மிகப்பெரிய எதிர்காலத்தின் ஆரம்பவாசல் கதவான நானோ தொழில்நுட்பம் பற்றி ஓரளவு தெரிந்துகொள்வதற்காத்தான் இந்த கட்டுரை.
சரி நானோ என்பது என்ன?
தற்போது 'நானோ' என்ற பெயரை பலரும் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 'நானோ' என்றால் என்ன?
'சென்டி', 'மில்லி' போன்று இதுவும் ஒரு அளவிடும் அலகு தான். மீட்டர், சென்டி மீட்டர், மில்லி மீட்டர் போன்றவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்தால், அதில் ஒரு பகுதிதான் மில்லி மீட்டர். இந்த மில்லி மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்தால், அதில் ஒரு பகுதி, மைக்ரோ மீட்டர். இந்த மைக்ரோ மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்தால், அதில் கிடைக்கும் ஒரு பகுதி தான் இந்த 'நானோ மீட்டர்.'
ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு தான் நானோ மீட்டர் எனப்படுகிறது,ஓரளவு புரியும்படி கூறுவது என்றால் குண்டூசி முனையுல் லட்சத்தில் ஒரு பங்கு எனலாம்.
பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.
இந்த மிக சிறிய அளவை நம்மால் சாதரணமாக பார்க்கமுடியாது.
இந்த மைக்ரோ, நானோ போன்றவற்றை நாம் சாதாரணமாகக் கண்களால் பார்க்க முடியாது. அவற்றைப் பார்க்க சக்தி வாய்ந்த நுண்ணோக்கிகள் அவசியம். இந்த நானோ டெக்னாலஜியை பயன் படுத்தி அறிவியல் துறையில் பல வியக்கதகு சாதனைகள் புரியப்படுகிட்றன, மிக மிக சிறிய அளவிலான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு மருத்துவத்துறைக்கும் , அறிவியல் துறைக்கும் பயன்படுத்தபடுகிறது சரி, இந்த அளவை வெளியிட்டவர் யார் தெரியுமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
அணு அளவில் கையாளாப்படும் இந்த தொழில்நுட்பம்தான் நானோ தொழில்நுட்பம் எனப்படுகிறது,இந்த தொழில்நுட்பத்தின் ஆதாரம்,அணு அளவில் எந்த ஒரு செயலையும் செய்யமுடியும் என்பதுதான், எல்லா பொருட்களுக்கும் ஆதரமாக இருப்பது அந்த பொருட்களின் அணு கட்டமைப்பு,அந்த பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ரகசியம் அதன் அணு கட்டமைப்பில் இருக்கிறது,அந்த அணு கட்டமைப்பை மாற்றினால் அந்த பொருள் வேறு வடிவம் பெறுகிறது.
மண்ணுக்குள் பல ஆண்டுகளாக வெப்பத்திலும் அடர்த்தியுலும் புதைந்து கிடக்கும் கரிக்கட்டையின் அணுவில் மாற்றம் ஏற்படும்போது அது வைரமாக மாறுகிறது. காற்று,தண்ணீர்,மண் ஆகியவற்றின் அணுக்களின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும்போது அது செடி,கொடி,மரம் ஆகிறது.
அணுகட்டமைப்பை நமது தேவைக்கு தகுந்தபடி எப்படி மாற்றுவது என்பது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்கிறது,நமது உடலுக்கு ஆதாரமாக இருப்பது ந்மது "டி.என்.ஏ"எனப்படும் மரபு அணு.
ஒவ்வொருவர் உடலில் இருக்கும் இந்த மரபு அணு ரகசியம் தான் அவர்களை அதற்கு தக்க உடல் அமைப்புடனும் குணாதிசயங்களுடனும் அவர்களை உருவாக்கிறது. அவ்வாறு எழுதப்பட்டு இருக்கும் கட்டளை போல அணு அளவில் நம்மாலும் எழுத முடியும் அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட கட்டளைகளை மாற்றி அமைக்க முடியும் என்று முயற்சிக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள். உடல் அமைப்பு மட்டும் அல்லாமல்,எல்லா பொருட்களின் அணு கட்டமைப்பையும் மாற்றி இயற்கையோடு இணைந்து பிரமிப்பூட்டும் வளர்ச்சியை காண ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,
ஆச்சிரியமான தயாரிப்புகள்
நானோ தொழில்நுட்பம் இப்போதே பல துறைகளில் வந்துவிட்டது
கார் கண்ணாடி வழியாக சூரிய வெளிச்சம் ஊடுருவும்,இரவில் எதிரே வரும் வாகனங்களில் இருந்து வரும் வெளிச்சத்தால் கண்கள் கூசும். இதை தவிர்க்க நானோ தொழில் நுட்பம் மூலம் புதிய வகை சன் கிளாஸ் தயாரித்து இருக்கிறார்கள் இந்த கண்ணாடி பர்ப்பதற்கு வெண்மையாக இருக்கும், ஆனால் சூரிய வெளிச்சத்தையும்,எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்துகிறது.
நானோ துகள்கள் கொண்ட கலவை மூலம் தயாரிக்கப்படும் கார் பம்பர்கள் எடை அதிகம் இல்லாமல் இருக்கின்றன, ஆனால் இபோதைய கார் பம்பர்களை விட அதிக உறுதியாக இருக்கின்றன.
நானோ துகள் கலவை கொண்டு தயாரிக்கப்படும் நூல் இழைகளில் கறை படிவதில்லை,இதன் மூலம் அழுக்கு அல்லது எந்த கறையும் அண்ட முடியாத ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன,
எளிதில் உடையாத டென்னிஸ்,மற்றும் கோல்ப் பந்துகள் ,டென்னிஸ் ராக்கெட்டுக்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
மிக குறைந்த மின்சக்தியில் அதிக வெளிச்சம் கொண்ட பல்புகள் தயாரிக்கப்படுகின்றன
கம்பியூட்டர்களில் குறைந்த இடத்தில் மிக அதிக அளவில் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் கருவிகள் செய்து இருக்கிறார்கள்
இது போல இன்னும் பல துறைகளில் நானோ தொழிநுட்பம் மிக அதிக அளவில் புரட்சி செய்ய இருப்பது மருத்துவம்,தகவல் தொழில் நுட்பம்,கம்பியூட்டர்,எரிசக்தி ஆகியவற்றில்தான் மருத்துவத்தில் செய்ய இருக்கும் புரட்சியால் கத்தி இன்றி ரத்தம் இன்றி உடனடியாக நோயை கண்டுபிடித்து குணப்படுத்தும் காலம் விரைவில் வர இருக்கிறது.
கம்ப்யூட்டர்,தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இப்போது இருக்கும் கம்ப்யூட்டர்கள் எதிர்காலத்தில் அளவில் மிக மிக சிறியதாகவும் ஆற்றலில் பல மடங்கு வேகமாக செயல்படவும் ஆகிவிடும்.
எரிசக்தியில் நிகழ இருக்கும் புரட்சியால் சூரிய ஒளியை கொண்டு பல மடங்கு எரிசக்தியை உருவாக்கி எதிர்காலத்தில் மின்சாரமோ பெட்ரோல் டீசலோ தேவையே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.இந்தியவை பொறுத்த வரை நானோ தொழில்நுட்பத்தின் தந்தை என்று நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமை கூறலாம். அப்துல் கலாம் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் நானோ தொழில்நுட்பம் பற்றி ஒருசில வார்த்தைகளாவது சொல்ல தவறுவது இல்லை நானோ தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி சக்தியின் பயன்பாட்டை 45 சதவீத அளவிற்கு உயர்த்தினால் இந்தியாவின் எரிசக்தி தேவையின் பெரும்பகுதி நிறைவேற்றுப்பட்டுவிடும்,எனவே நானோ தொழில்நுட்பத்திற்கு அதிக அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது டாக்ரேட் ஆராய்ச்சிக் கட்டுரை-ஐ அளிக்கும் போது ஒரு சர்க்கரை மூலக்கூறின் கூட்டணுவின் பரிமாணத்தை சுமார் ஒரு நானோமீட்டர் என்று அறிவித்தார், முதன் முதலாக நானோமீட்டர் என்னும் அளவு உலகுக்கு அறிமுகமானது. நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியன் பகுதி. ஒரு நானோமீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம்." நானோ" உலகின் விதிகள், குவாண்டம் இயற்பியல் விதிகள். இவைகளை விளக்க புதிய முறைகள், கருவிகள் வேண்டும்.
சுமார் நூறு நானோ மீட்டரில் இருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டேபோய் ஒரு தனிப்பட்ட எலெக்ட்ரானை நம் விருப்பத்தை போல நடத்துவதுதான் இந்த இயலின் குறிக்கோள். ஆராய்ச்சி முறைகள் சில, " இது சாத்தியமே" என்கிற நம்பிக்கையை தருகின்றன. நானோ டெக்னாலஜின் ஆதார சாகசம் அணு அளவில் பொருள்களை நம் விருப்பதை போல மாற்றுவது. ஒரு பொருளின் அணுகட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை பண்புகள் மாறிவிடும் என்பதே இதன் அடிப்படை. உதாரணமாக, அடுபுக்கரியின் அணுகட்டமைப்பை சற்று மாற்றினால் அது வைரமாகிறது. இயற்கையில் இயல்பாக நடக்கும் இயற்கை வினைகளை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்பிக்கை தருகிறது இந்த டெக்னாலஜி. டெக்ஸ்லெர், மூலக்கூறு கம்ப்யூட்டர்களை வடிவமைபத்ற்கான யோசனை இயற்கையில் ப்ரோடீன் தயாரிப்பை கவனித்தால் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும் ஒரு மரபணு அதற்குள்ளேயே அதன் இறுதி வடிவத்தின் செய்தியை வைத்திருப்பதை போல ஒரு கம்ப்யூட்டர் தான் இறுதியில் இந்த வேலை செய்யும் சாதனமாகப் போகிறோம் என்கிற அறிவை அதற்குள்ளே வைத்துவிட முடியும் என்கிறார். நூறு நானோ மீட்டரைவிட நுட்பமாக பொருள்களை தயாரிக்கும் திறமைதான் நானோ டெக்னாலஜி. இந்தத் திறமையை இரண்டு விதமாக அணுகுகிறார்கள், ஒன்று, "டாப் டவுன் " மற்றொன்று "பாட்டம் அப் ". அதாவது படிப்படியாக அளவை மாற்றிக்கொண்டே போய் "நானோ" அளவை எட்டுவது. இன்றைய தினத்தின் மைக்ரோ டெக்னாலஜி முறைகள் இந்த "டாப் டவுன்" வகையைச் சார்ந்தவை.மூலக்கூறுகள் என்னும் கூட்டணுவை ஒரு ச்விட்சாக மாற்றலாம் என்கிற யோசனை சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. இது சமிபத்தில் தான் நடைமுறையில் சில வேதியியல் பொறியியல் வளர்ச்சிகளினால் சாத்தியமாகி இருக்கிறது. மூலக்கூறுகள் என்னும் கூட்டணுக்கள் சில சேர்ந்து கொண்டு oxidation reduction என்னும் வேதியியல் மாற்றம் பெறும் போது ஒரு ச்விட்சாக இயங்குகிறது என்று UCLA பல்கலைகழகத்திலும், ஹியூலிட் பக்கர்டு நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். நானோ டெக்னாலஜியின் பொருள்கள் வாயு அல்லது திரவ வடிவில் இல்லாமல் அதே சமயம் திடப்பொருள்கள் போல திடமாக இல்லாமல் குறிப்பிட்ட வரிசையில் மாறக்கூடிய திடப்பொருள்கள். நானோ டெக்னாலஜியின் தயாரிப்பு முறையில், அணு அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பொருளை அணு அணுவாக, சீராக உற்பத்தி செய்ய முடியும் என்பது சாத்தியம் எனில் கழிவுப் பொருள்கள் இருக்காது.
தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை காற்றில் கலக்காமல் செயல்படுத்தலாம். விரயமான செயல்கள் இல்லாததால் ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய இந்தத் தொழில்நுட்பம் ஓர் அபரிவிதமான வளர்ச்சியை மனித வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக