Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

ஈசி ஓட்ஸ் நோன்பு கஞ்சி


தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)

பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு

புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை:
----------------

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு
எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு
வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி,
பச்சை
மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும்
புதினா,மல்லி தூவி இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.

வடை,பஜ்ஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

அவசரமாக நோன்பு கஞ்சி செய்ய வேண்டும் என்றால்
இப்படி ஓட்ஸ் வைத்து செய்யலாம் அரிசி வைத்து
செய்தால் சீக்கிரம் வேகாது ஓட்ஸ் சீக்கிரம் வெந்து
விடும் உடம்புக்கு நல்லதும் கூட ஓட்ஸ்.

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ஓட்ஸில் கூட செய்யலாமா புதுசா இருக்கே..

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஓட்ஸில் நோன்பு கஞ்சி செய்யலாம் சூப்பரா டேஸ்டா இருக்கும் ஆரோக்கியமான கஞ்சி நீங்க செய்து பாருங்க நான் நோன்பில் இந்த கஞ்சிதான் செய்வேன் அரிசி வைத்து செய்யமாட்டேன்.....

உங்கள் கருத்துக்கு நன்றி......

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்