Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

வெஜ் சீஸ் சமோசா


தேவையான பொருள்கள்:
---------------------------------

மைதா மாவு-1&1/2கப்
பட்டர்-3டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
எண்ணை-பொறிக்க தேவையான அளவு

வெஜ் மிக்ஸ் தேவையான பொருள்:
---------------------------------------------

கேரட்-1
பின்ஸ்-7
உருளைக் கிழங்கு-1பெரியது
பட்டானி-1/4கப்
வெங்காயம்-1பெரியது
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய் தூள்-1/2டீஸ்பூன்
மிளகு தூள்-1டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு-1/2டீஸ்பூன்(விழுது)
உப்பு-சுவைக்கேற்ப
எண்ணை-3டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா-1/4டீஸ்பூன்
ஃபெடா சீஸ்-5டேபிள் ஸ்பூன் துருவியது

செய்முறை:
---------------
ஒரு பாத்திரத்தில் மாவு,உப்பு,பட்டர் எல்லாவற்றையும்
சேர்த்து பிசைந்து கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து
சப்பாத்தி மாவு பதத்திற்க்கு நன்றாக பிசைந்து ஒரு
துணியினால்
மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு
சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ளவும்
அவிந்ததும்
உருளைக் கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்

காய்களை பொடிதாக நறுக்கி கொள்ளவும் பின் கடாயில்
எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
லேசாக வதங்கியதும் இஞ்சி,பூண்டு,உப்பு சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும் பின் பொடிகள்
அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின் எல்லா
காய்களையும் சேர்த்து கிளறவும்.

காய்கள் வெந்து இறக்கப் போகும் முன் சீஸ் சேர்த்து
கிளறவும் எல்லாம் நன்கு கிளறி வெந்ததும் அடுப்பில்
இருந்து இறக்கி ஆரவிடவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு
தட்டுவது போல் தட்டி வெஜ் சீஸ் கலவையினை அதன்
நடுவில் வைத்து மூடி எண்ணையில் போட்டு பொறித்து
எடுத்தால் வெஜ் சீஸ் சமோசா.

தக்காளி சாஸ்வுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
ரெடி.

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

வாவ் சூப்பர்..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

தொடர்ந்து கருத்துப் போடும் ஜெய்க்கு நன்றி..
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
:-)

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்