
தேவையான பொருள்கள்:
டொஃபு (TOFU)-200கிராம்
மைதா மாவு-1 1/2 கப்
மிளகாய் பொடி-1/2டீஸ்பூன்
சிரகப் பொடி-1/4டீஸ்பூன்
கறி மசாலா-1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய்-3
மல்லி இலை-3டேபிள் ஸ்பூன்
எண்ணை-2டீஸ்பூன்
டோமெட்டோ சாஸ்-2டீஸ்பூன்
எண்ணை -பராட்டா சுட தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தொஃப் போட்டு நன்கு பிசையவும்
உதிரியாகும் வரை பிசையவும்.
பின் அதில் உப்பு,மிளகாய் பொடி,சாஸ்,எண்ணை,மல்லி,
சிரகப் பொடி,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கறி
மசாலா எல்லாவற்றையும் போட்டு சேர்த்து பிசையவும்.
அந்த கலவை நன்கு சேர்ந்ததும் அதில் மாவையும்
சேர்த்து பிசையவும் தண்ணீர் தேவையில்லை
தொஃப்பில் உள்ள ஈரத்தன்மையே போதும் தேவை
என்றால் சிறிதளவு சேர்க்கவும்.
அதை நன்கு பிசைந்து 20நிமிடம் அப்படியே
காற்று படாத அளவுக்கு மூடி வைக்கவும்.
பின்பு அதை பராட்டாவாக தட்டி தாவாவில்
எண்ணை ஊற்றி அதில் அந்த பராட்டாவை
போட்டு பராட்டா சுடுவது போல் சுட்டு எடுக்கவும்.
இந்த பராட்டா மிகவும் மெதுவாக இருக்கும்
சுவையாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக