படம்:அமராவதி
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி
படலாசிரியர்:வைரமுத்து
ஆண்:தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெண்:காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ஆண்:இந்த பந்தம் இன்று வந்ததோ
பெண்:ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
ஆண்:உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெண்:தாஜ்மஹால் தேவையில்லை
ஆண்:அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்
பெண்:காதலின் சின்னமே
ஆண்:பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
பெண்:ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
ஆண்:கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
பெண்:கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
ஆண்:நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே
பெண்:தாஜ்மஹால் தேவையில்லை
ஆண்:அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்
பெண்:காதலின் சின்னமே
பெண்:சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
ஆண்:வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா
பெண்:வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
ஆண்:வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெண்:வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே
ஆண்:தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெண்:காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ஆண்:இந்த பந்தம் இன்று வந்ததோ
பெண்:ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
ஆண்:உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெண்:தாஜ்மஹால் தேவையில்லை
ஆண்: அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்
பெண்:காதலின் சின்னமே
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக