
தேவையான பொருள்கள்
பீட்ருட்-1
கத்திரிக்காய்-1
வெங்காயம் - 1
பூண்டு-3பல்
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி சாம்பார்பொடி -2தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
துவரம் பருப்பு -1/4கப்
தாளிக்க
கடுகு-1தேக்கரண்டி
உளுந்து-1தேக்கரண்டி
வற மிளகாய்-3
எண்ணைய்-3தேக்கரண்டி
சிரகம்- 1/4ஸ்பூன்
கருவாயிலை-சிறிதளவு
செய்முறை
துவரம் பருப்பை ஊறவைத்து அதில் 4தேக்கரண்டி எடுத்து தனியாக வைக்கவும். துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள்,பூண்டு சேர்த்து வேகவைக்கவும். பச்சைமிளகாய் வெங்காயம்,தக்காளி,கத்திரிக்காய் பீட்ருட் எல்லாவற்றையும் பாத்திரத்தில் போட்டு வேகவிடவும் வெந்ததும் 4கப் தண்ணீர் ஊற்றவும் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும் நன்கு கலக்கி சாம்பார் பொடியை சேர்க்கவும்.அதில் தனியாக எடுத்துவைத்த பருப்பை போடவும் நன்கு கொதித்ததும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து,கருவாயிலை,வற மிளகாய்,சிரகம் போட்டு தாளித்து கொட்டவும்.
சுவையான பீட்ருட் சாம்பார் ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக