
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் -1
தக்காளி-1
கருவாயிலை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் - 2ஸ்பூன்
பட்டை - 1 சிறு துண்டு
லவங்கம் - 4
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி,புதினா
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை அரிசியை கழுவி 20 நிமிடம் ஊர வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்ததும் தக்காளி போட்டு வதக்கவும் பின் பட்டாணி போட்டு சேர்த்து கிளறவும். இப்போது ஊர வைத்த அரிசி, உப்பு,தயிர், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிறுந்தீயில் மூடி போட்டு சாதம் வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.பட்டாணி புலாவ் ரெடி.
குறிப்பு: கலராக வேண்டும் என்றால் சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சட்டியில் எண்ணைய் ஊற்றி ஒரு முட்டை ஊற்றி கிளறி சாதம் மேல் தூவி கொடுக்கலாம் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக