
நாம் ஈசியாக வீட்டில் சமைப்பதை காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டால்
அது நம் உடம்பிற்க்குதான் கேடு நாமே அதை செய்தால் ஆரோக்கியமான
உணவாக அமையும் ஆகவே நீங்கள் உங்கள் செல்ல குழந்தைக்கு
நீங்களே சிரமம் பார்க்காமல் சமைத்து கொடுங்கள்.
தேவையான பொருள்கள்
வேர்க்கடலை-1கப் (வறுக்காதது)
கடலை மாவு-1/2கப்
அரிசிமாவு-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-பொறிக்க தேவையான அளவு
செய்முறை
கடலையுடன் கடலை மாவு,உப்பு,இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி மாவு
எல்லாவற்றையும் போட்டு கலந்து கொள்ளவும் 5நிமிடம் வைத்து விட்டு
பிறகு எண்ணை காயவிட்டு அதில் உதிர்த்தி விட்டால் போல்
போட்டு தீயை குறைவாக வைத்து நன்கு வேக விட்டு பொன்னிறமானதும்
எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக