
தேவையான பொருள்கள்:
------------------------------
மைதா மாவு-1கப்
உருளைக் கிழங்கு-1பெரியது
மல்லி-சிறிதளவு
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டர்-2டீஸ்பூன்
மிளகாய் தூள்-1/2டீஸ்பூன்
எண்ணை-தேவையான அளவு
செய்முறை:
---------------
உருளைக் கிழங்கை தண்ணீரில் போட்டு வேகவைத்து
கொள்ளவும்.
வெந்த உருளைக் கிழங்கை தோலை நீக்கி நன்றாக நசுக்கி
கொள்ளவும் பின் ஒரு கடாயில் எண்ணை விட்டு உருளை
கிழங்கை போட்டு கிளறவும் பின் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
எல்லாம் நன்கு சேர்த்து கிளறியவுடன் மல்லி தூவி
இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாவு ,உப்பு இரண்டையும் சேர்த்து
கலந்து அதில் பட்டர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு பதத்திற்க்கு பிசைந்து எடுக்கவும்.

கலவையினையும் அதே அளவு உருண்டை பிடித்து
மாவை சப்பாத்திக்கு தட்டு வது போல் லேசாக தட்டி
நடுவில் உருளைக் கிழங்கு கலவையை வைத்து

உருட்டி சூடுபடுத்திய தாவாவில் போட்டு சிறிதளவு
எண்ணை விட்டு சுட்டு எடுக்கவும்.

அப்படியே சாப்பிடலாம் எண்ணைக்கு பதில் நெய் போட்டு
சுட்டெடுத்தால் சுவை இன்னும் அதிகமாக கிடைக்கும்.
2 கருத்துகள்:
எனது ஃபேவரைட் டிஷ் இது.
உங்கள் கருத்துக்கு நன்றி:-)
கருத்துரையிடுக