
சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் பழுத்துக்காணப்படும்
இக்குறையை நீக்க வீட்டு சமையலுக்குஉபயோகமாகும்
சீரகத்தை லேசாக வறுத்து பின்பு நைஸ் பவுடராகஅரைத்து
வைத்துக் கொள்ளவ்ர்ர்ண்டும்.
குளிக்கப் போவதற்கு முன் இந்தத் தூளில் கொஞ்சம்
எடுத்து காய்ச்சிய பசும் பாலில் போட்டுக் கலக்கி
பின் இதை தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்க்கு
பின் குளித்து விடலாம் இதை தொடர்ந்து செய்து
வந்தால் முடி கருநிறமாக மாறிவிடும்.
முடி உதிர்வதை நிறுத்த...
பொன்னாங்கண்ணி கீரை,கரிசலாங்கனி கீரையை
தேங்காயெண்ணையுடன் சேர்த்து தைல பத்த்திற்கு
காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
இதை தினந்தோறும் கேச தைலமாக உபயோகித்து
வந்தால் முடி உதிர்வது நின்று நல்லா வளர ஆரம்பிக்கும்.

தலைச் சொட்டை மறைய....
சாதரண நாட்டு வெங்காயம் பாதியாக நறுக்கிகாலையில்
குளிக்கப் போகும் முன்பு தலையில் சொட்டை உள்ளஇடங்களில்
அழுத்தி தேய்த்து பத்து நிமிடம் அப்படியேவைத்திருக்க வேண்டும்
அப்புறம் குளித்து விட வேண்டும் இதை 24 நாட்கள்விடாமல்
தொடர்ந்து தேய்த்தாள் புதிதா முடி வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக