
தேவையானப் பொருட்கள்:
பீட்ரூட்- 1
பெரிய வெங்காயம்- 1
கடலைப் பருப்பு-1/2 கப்
எண்ணெய்-பொறிக்க தேவையான அளவு
அரைக்க:
காய்ந்த மிளகாய்-6
சோம்பு- 1/2 டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரைக்க தந்து இருக்கும் பொருள் எல்லாவற்றையும்
சட்டியை சூடு படுத்து அதில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
வறுத்ததை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்
பீட்ரூட்டைக் கழுவி, தோல் நீக்கி துருவவும் பருப்பை
ஊறவைத்து பருப்பு வடை பதத்திற்க்கு அரைத்துக்கொள்ளவும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் துருவிய பீட்ரூட், வெங்காயம், அரைத்த பருப்புக் கலவை மூன்றையும் பிசறி கடாயில் எண்ணெயைக் காயவைத்து வடையை தட்டி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். உங்கள் விரும்பம் போல் எந்த சட்னியோடும் சாப்பிடலாம்.
இந்த வடை பீட்ருட் போட்டு செய்வதால் ஆரோக்கியமானது அதோடு குழந்தைங்க பீட்ருட் சாப்பிட மாட்டார்கள் இப்படி வடை செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக