படம்: பொறி
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை: தினா
பல்லவி
ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
சரணம் 1
ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
சரணம் 2
ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக