Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 16, 2010

சமையலுக்கான டிப்ஸ்

வெண்டைக்காய் வதக்கும் போது நூல்நூலாக வரும்
அதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஊற்றி
கிளறினால் நூல்நூலாக வராது.

மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன்
2சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டிப் போட்டு
இறக்கவும் நல்ல மனமாக இருக்கும்


மீன் குழம்பு அடுப்பில் இருந்து இறக்கும் போது வெந்தயம்
பெருங்காயம் இரண்டையும் வருத்து தூள் பண்ணி 1/4 டீஸ் பூண் போட்டு இறக்கினால் நல்ல மனமாக இருக்கும்.

காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும்.
பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க
ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து,
காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து,
பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும்

குழந்தைகளின் பால் பட்டில், டம்ளர் இவற்றை கழுவ
புளித்த இட்லி மாவை பயன் படுத்துங்கள். பளபளக்கும்
கெடுதல் கிடையாது.


உளுந்த வடைக்கு சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்தால்
வடை மெதுவாக இருக்கும். ருசி மாறாது
.

நம் சமைக்கும் சமையலில் உப்பு அதிகமாக போட்டுவிட்டால் அதில்
உருளைகிழங்கை கட் பன்னி போட்டால் உப்பை எடுத்து விடும்,

துவரம்பருப்பை வேகவைக்கும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றினால் சீக்கிரம் பருப்பு வெந்துவிடும்.

கடலைபருப்பு,மல்லி,பெருங்காயம்,வெந்தயம்.அரிசி,வற்ற்ல் இவற்றை தனித்தனியாக வருத்து பொடியாக்கி கொள்ளவும்
புளியோதரைக்கான புளிக்கரைசலை செய்யும் போது இந்தப்பொடியை
சேர்க்கவும்.அடுப்பை அனைத்தபின் சேர்க்கவும்.

1 கருத்து:

sathya சொன்னது…

very good idea for food preparation

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்